• Feb 20 2025

இலங்கைக்கு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

Chithra / Feb 16th 2025, 2:09 pm
image

 

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. 

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டில், இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது, அதிலிருந்து மீட்கும் நோக்கில் 80 கோடியே 80 லட்சம் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியிருந்தது. 

இந்த ஆண்டு வழங்கப்படும் நிதி குறிப்பாக விவசாயம், மின்சாரம், சுற்றுலா, திறன் மேம்பாடு மற்றும் பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை போன்ற துறைகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இலங்கைக்கு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி  இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டில், இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது, அதிலிருந்து மீட்கும் நோக்கில் 80 கோடியே 80 லட்சம் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியிருந்தது. இந்த ஆண்டு வழங்கப்படும் நிதி குறிப்பாக விவசாயம், மின்சாரம், சுற்றுலா, திறன் மேம்பாடு மற்றும் பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை போன்ற துறைகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement