• Nov 23 2024

பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

Chithra / Jan 12th 2024, 8:30 am
image

 

பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும்  காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றையதினம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பித்தவுடன் அதனை உடனடியாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஒழுக்கம் தொடர்பான விதிகளை உள்ளடக்கிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ள போதிலும், அதனை கடைப்பிடிக்காமையினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன.

அதனை கருத்திற்கொண்டு, புதிய சுற்று நிருபத்தை வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த வாரத்தின் இரண்டு நாட்கள், அனைத்து மாகாணங்களினதும் ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள், கல்வி பணிப்பாளர்கள் அனைவரும் கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு நாட்களிலும், பாடசாலைகளின் ஒழுக்கம், கல்வி தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்  அவதானம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு  பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும்  காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்றையதினம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பித்தவுடன் அதனை உடனடியாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே, ஒழுக்கம் தொடர்பான விதிகளை உள்ளடக்கிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ள போதிலும், அதனை கடைப்பிடிக்காமையினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன.அதனை கருத்திற்கொண்டு, புதிய சுற்று நிருபத்தை வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, அடுத்த வாரத்தின் இரண்டு நாட்கள், அனைத்து மாகாணங்களினதும் ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள், கல்வி பணிப்பாளர்கள் அனைவரும் கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.குறித்த இரண்டு நாட்களிலும், பாடசாலைகளின் ஒழுக்கம், கல்வி தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்  அவதானம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement