களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (11) காலை 9:00 முதல் இரவு 9:00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பேலிகொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா எல, கட்டுநாயக்க, சீதுவை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள், பியகம, மஹர, தொம்பே, ஜா எல, கட்டான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
12 மணித்தியால நீர் வெட்டு தொடர்பில் அறிவிப்பு களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (11) காலை 9:00 முதல் இரவு 9:00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.பேலிகொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா எல, கட்டுநாயக்க, சீதுவை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள், பியகம, மஹர, தொம்பே, ஜா எல, கட்டான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.