• Sep 20 2024

அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

Chithra / Jan 26th 2023, 8:55 am
image

Advertisement

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினம் எதிர்வரும் வாரமளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது, அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தல் வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கான பணிகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கல்முனை நகர மற்றும் எல்பிட்டி பிரதேச சபை தவிர்ந்த 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இந்த முறை இடம்பெறவுள்ளது.

அதேநேரம், இந்த முறை ஒரு கோடியே 70 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் அச்சிட எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் கண்காணிப்பு ஆணைக்குழுக்களுக்கு இடையே இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, தேர்தல் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினம் எதிர்வரும் வாரமளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தற்போது, அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தேர்தல் வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கான பணிகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கல்முனை நகர மற்றும் எல்பிட்டி பிரதேச சபை தவிர்ந்த 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இந்த முறை இடம்பெறவுள்ளது.அதேநேரம், இந்த முறை ஒரு கோடியே 70 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் அச்சிட எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் கண்காணிப்பு ஆணைக்குழுக்களுக்கு இடையே இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பு தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.இதன்போது, தேர்தல் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement