• May 17 2024

பரீட்சை பெறுபேறுகள், கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு! samugammedia

Chithra / Jul 19th 2023, 4:47 pm
image

Advertisement

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மற்றும், அடுத்த தவணை கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி 28 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

பரீட்சைக்கான விண்ணப்பங்கள் குறித்த திகதிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதேநேரம் அரச மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளின் முதல் தவணை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

இரண்டாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் 2 கட்டங்களாக நடைபெறும் என்றும் அதன் முதல் கட்டம் ஓகஸ்ட் 17-ம் திகதி வரை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


பரீட்சை பெறுபேறுகள், கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு samugammedia உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மற்றும், அடுத்த தவணை கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி 28 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.பரீட்சைக்கான விண்ணப்பங்கள் குறித்த திகதிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.இதேநேரம் அரச மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளின் முதல் தவணை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.இரண்டாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் 2 கட்டங்களாக நடைபெறும் என்றும் அதன் முதல் கட்டம் ஓகஸ்ட் 17-ம் திகதி வரை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement