• May 19 2024

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தம் - முற்றாக நிராகரித்தது கூட்டமைப்பு samugammedia

Chithra / Jul 19th 2023, 4:04 pm
image

Advertisement

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ்தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது.

அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான முன்மொழிவை மற்றுமொரு வெற்றுவாக்குறுதி என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் எங்கள் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த தயாரில்லை என்றால், அது 13ற்க்கு  அப்பால் செல்வதற்கு இலங்கை அரசிற்கு அரசியல் உறுதிப்பாடு இல்லை என்பதுதான் அர்த்தம்  என தமிழ்தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்  இடையிலான சந்திப்பின் பின் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் யோசனைகளை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் என  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

21ம் திகதி இந்தியாவிற்கான ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்திற்கு முன்னதாக அவர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளமையும், 13வது திருத்தம் குறித்த ஜனாதிபதியின் நிலைப்பாடும்  முக்கியத்துவம் பெருகின்றது.

1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையை தொடர்ந்து சட்டமாக மாறிய 13வது திருத்தசட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

சுயநிர்ணய உரிமைக்கான இலங்கை தமிழர்களின் கோரிக்கையை தொடர்ந்து சில அதிகாரப்பகிர்விற்கான ஒரேயொரு சட்ட உத்தரவாதமாக அது காணப்படுகின்றது.

எனினும் 13வது திருத்தம் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள் உட்பட 9 மாகாணங்களுக்கும்  அதிகாரங்களை பகிர்வதற்கு முயல்கின்றது.

கொழும்பின் தொடர்ந்துவந்த ஆட்சியாளர்கள் பொலிஸ் காணி அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள மறுத்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தம் - முற்றாக நிராகரித்தது கூட்டமைப்பு samugammedia பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ்தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது.அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான முன்மொழிவை மற்றுமொரு வெற்றுவாக்குறுதி என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அரசாங்கம் எங்கள் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த தயாரில்லை என்றால், அது 13ற்க்கு  அப்பால் செல்வதற்கு இலங்கை அரசிற்கு அரசியல் உறுதிப்பாடு இல்லை என்பதுதான் அர்த்தம்  என தமிழ்தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்  இடையிலான சந்திப்பின் பின் அவர் இதனை தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் யோசனைகளை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் என  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.21ம் திகதி இந்தியாவிற்கான ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்திற்கு முன்னதாக அவர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளமையும், 13வது திருத்தம் குறித்த ஜனாதிபதியின் நிலைப்பாடும்  முக்கியத்துவம் பெருகின்றது.1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையை தொடர்ந்து சட்டமாக மாறிய 13வது திருத்தசட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.சுயநிர்ணய உரிமைக்கான இலங்கை தமிழர்களின் கோரிக்கையை தொடர்ந்து சில அதிகாரப்பகிர்விற்கான ஒரேயொரு சட்ட உத்தரவாதமாக அது காணப்படுகின்றது.எனினும் 13வது திருத்தம் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள் உட்பட 9 மாகாணங்களுக்கும்  அதிகாரங்களை பகிர்வதற்கு முயல்கின்றது.கொழும்பின் தொடர்ந்துவந்த ஆட்சியாளர்கள் பொலிஸ் காணி அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள மறுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement