• Sep 29 2024

யாழிலிருந்து கதிர்காமத்திற்கான பாதயாத்திரை தொடர்பில் வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / May 2nd 2023, 12:24 pm
image

Advertisement

கதிர்காமத்திற்கான பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களையும் இணைத்து 46 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் புனித் பாதயாத்திரை இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.

கடந்த 23வருடங்களாக சைவமரபு பாரம்பரியத்துடன் இடம்பெற்றுவரும் இப் பாதயாத்திரை கதிர்காமக் கந்தனாலய கொடியேற்ற தினத்தில் கதிர்காமத்தைச் சென்றடைவது வழமையாகும்.

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து எதிர்வரும் மே 06ஆம் திகதி அதிகாலை நடைபெறும் விசேட பூசையினைத் தொடர்ந்து மோகன்சுவாமியால் வேலாயுதமானது கதிர்காம பாதயாத்திரைக் குழுத்தலைவர் ஜெயாவேல்சாமியிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்படும்.

தொடர்ந்து ஆரம்பமாகும் பாதயாத்திரை வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து ஜெயாவேல்சாமி அணியில் வழமையாக பயணிக்கும் நூறுபக்தர்களுடன் மீண்டும் பாதயாத்திரை இடம்பெறும்.

பாதயாத்திரைக்கான சகல அனுமதிகளும் வழமைபோல பெறப்பட்டிருப்பதாக பாதயாத்திரைக் குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

இதேவேளை கதிர்காம ஆடி வேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் நடும் வைபவம் எதிர்வரும் மே 6ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

எனவே யூன் 19ஆம் திகதி கொடியேற்றம் இடம்பெற்று ஜூலை 4 ஆம் திகதி எசலபெர ஹராவுடனான தீர்த்தோற்சவம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

யாழிலிருந்து கதிர்காமத்திற்கான பாதயாத்திரை தொடர்பில் வெளியான அறிவிப்பு.samugammedia கதிர்காமத்திற்கான பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களையும் இணைத்து 46 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் புனித் பாதயாத்திரை இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது. கடந்த 23வருடங்களாக சைவமரபு பாரம்பரியத்துடன் இடம்பெற்றுவரும் இப் பாதயாத்திரை கதிர்காமக் கந்தனாலய கொடியேற்ற தினத்தில் கதிர்காமத்தைச் சென்றடைவது வழமையாகும்.தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து எதிர்வரும் மே 06ஆம் திகதி அதிகாலை நடைபெறும் விசேட பூசையினைத் தொடர்ந்து மோகன்சுவாமியால் வேலாயுதமானது கதிர்காம பாதயாத்திரைக் குழுத்தலைவர் ஜெயாவேல்சாமியிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்படும்.தொடர்ந்து ஆரம்பமாகும் பாதயாத்திரை வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து ஜெயாவேல்சாமி அணியில் வழமையாக பயணிக்கும் நூறுபக்தர்களுடன் மீண்டும் பாதயாத்திரை இடம்பெறும்.பாதயாத்திரைக்கான சகல அனுமதிகளும் வழமைபோல பெறப்பட்டிருப்பதாக பாதயாத்திரைக் குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.இதேவேளை கதிர்காம ஆடி வேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் நடும் வைபவம் எதிர்வரும் மே 6ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.எனவே யூன் 19ஆம் திகதி கொடியேற்றம் இடம்பெற்று ஜூலை 4 ஆம் திகதி எசலபெர ஹராவுடனான தீர்த்தோற்சவம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement