• May 20 2024

பிள்ளைகளுக்காக சிறந்த வாழ்க்கையை எதிர்பார்த்து அமெரிக்கா சென்ற தாயார் படுகொலை - வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்! samugammedia

Tamil nila / May 2nd 2023, 12:31 pm
image

Advertisement

சிறப்பான வாழ்க்கையை எதிர்பார்த்து அமெரிக்காவில் குடியேறிய தாயார் ஒருவர் தமது பிள்ளைகளை காப்பாற்றும் முயற்சியில் துப்பாக்கி குண்டுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க மாகாணம் டெக்சாஸின் கிளீவ்லேண்ட் அருகே வெள்ளிக்கிழமை இரவு ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒரு பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்களில் ஒருவர் சோனியா கஸ்மன். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தமது இளைய மகன் டேனியலுடன் அமெரிக்காவில் குடியேறியவர் இந்த சோனியா.

தமது கணவர் வில்சன் கார்சியாவுடன் இணைந்து கிளீவ்லேண்ட் அருகே குடியிருப்பு ஒன்றை வாங்கியிருந்தார். இந்த வீட்டில் தான் சோனியா அண்டை வீட்டு நபரால் படுகொலை செய்யப்பட்டார்.


இவர்களுக்கு இரு பிள்ளைகள், அதில் 8 வயது டேனியல் என்பவரே சோனியாவுடன் படுகொலை செய்யப்பட்டவர். சோனியா மற்றும் மகன் டேனியல் உட்பட அந்த குடும்பத்தில் ஐவர் குறித்த தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர்.

தாக்குதலில் ஈடுபட்ட 38 வயது பிரான்சிஸ்கோ ஒரோபெசா சம்பவயிடத்தில் இருந்து தப்பியதுடன், இதுவரை பொலிசாரிடம் சிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. தமது மகன் டேனியலுக்கு தரமான கல்வி, அத்துடன் நாட்டில் உள்ள தமது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் கொஞ்சம் பணம் அணுப்ப வேண்டும் என்ற ஆசை மட்டுமே சோனியாவுக்கு இருந்துள்ளது.

மொத்த பேர்கள் மீதும் வெறித்தனமாக சம்பவத்தின் போது தமது மகனையும் மகளையும் துப்பாக்கி குண்டில் இருந்து காப்பாற்ற முயன்ற நிலையில், சோனியா கொல்லப்பட்டதுடன், டேனியல் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்ததாக கூறுகின்றனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஒரோபெசா என்பவரது வீட்டுக்கு சென்று, துப்பாக்கியால் சுடுவதை கொஞ்சம் நிறுத்துங்கள், குழந்தை ஒன்று தூங்க முடியாமல் அழுகிறது என முறையிட்டுள்ளார்

ஆனால், இதை கொஞ்சமும் சட்டை செய்யாத ஒரோபெசா தனது வீட்டுக்குள் சென்று AR-15 ரக துப்பாக்கியுடன் திரும்பி வந்து, மொத்த பேர்கள் மீதும் வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், சோனியா, மகன் டேனியல் உட்பட ஐவர் படுகொலை செய்யப்பட்டனர்.



பிள்ளைகளுக்காக சிறந்த வாழ்க்கையை எதிர்பார்த்து அமெரிக்கா சென்ற தாயார் படுகொலை - வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் samugammedia சிறப்பான வாழ்க்கையை எதிர்பார்த்து அமெரிக்காவில் குடியேறிய தாயார் ஒருவர் தமது பிள்ளைகளை காப்பாற்றும் முயற்சியில் துப்பாக்கி குண்டுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க மாகாணம் டெக்சாஸின் கிளீவ்லேண்ட் அருகே வெள்ளிக்கிழமை இரவு ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒரு பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்களில் ஒருவர் சோனியா கஸ்மன். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தமது இளைய மகன் டேனியலுடன் அமெரிக்காவில் குடியேறியவர் இந்த சோனியா.தமது கணவர் வில்சன் கார்சியாவுடன் இணைந்து கிளீவ்லேண்ட் அருகே குடியிருப்பு ஒன்றை வாங்கியிருந்தார். இந்த வீட்டில் தான் சோனியா அண்டை வீட்டு நபரால் படுகொலை செய்யப்பட்டார்.இவர்களுக்கு இரு பிள்ளைகள், அதில் 8 வயது டேனியல் என்பவரே சோனியாவுடன் படுகொலை செய்யப்பட்டவர். சோனியா மற்றும் மகன் டேனியல் உட்பட அந்த குடும்பத்தில் ஐவர் குறித்த தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர்.தாக்குதலில் ஈடுபட்ட 38 வயது பிரான்சிஸ்கோ ஒரோபெசா சம்பவயிடத்தில் இருந்து தப்பியதுடன், இதுவரை பொலிசாரிடம் சிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. தமது மகன் டேனியலுக்கு தரமான கல்வி, அத்துடன் நாட்டில் உள்ள தமது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் கொஞ்சம் பணம் அணுப்ப வேண்டும் என்ற ஆசை மட்டுமே சோனியாவுக்கு இருந்துள்ளது.மொத்த பேர்கள் மீதும் வெறித்தனமாக சம்பவத்தின் போது தமது மகனையும் மகளையும் துப்பாக்கி குண்டில் இருந்து காப்பாற்ற முயன்ற நிலையில், சோனியா கொல்லப்பட்டதுடன், டேனியல் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்ததாக கூறுகின்றனர்.கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஒரோபெசா என்பவரது வீட்டுக்கு சென்று, துப்பாக்கியால் சுடுவதை கொஞ்சம் நிறுத்துங்கள், குழந்தை ஒன்று தூங்க முடியாமல் அழுகிறது என முறையிட்டுள்ளார்ஆனால், இதை கொஞ்சமும் சட்டை செய்யாத ஒரோபெசா தனது வீட்டுக்குள் சென்று AR-15 ரக துப்பாக்கியுடன் திரும்பி வந்து, மொத்த பேர்கள் மீதும் வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், சோனியா, மகன் டேனியல் உட்பட ஐவர் படுகொலை செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement