• Nov 26 2024

மலையக புகையிரத சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

Chithra / May 23rd 2024, 2:51 pm
image

 

மலையக புகையிரத பாதையில் ஹப்புத்தளை - பண்டாரவளைக்கு இடையில் மரங்கள் மற்றும் மண் சரிந்து வீழ்ந்தமையினால் புகையிரத பாதை பாதிக்கப்பட்டுள்ளது.

அதிக காற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஹப்புத்தளைக்கும் தியத்தலாவிற்கும் இடையிலான பாலத்திற்கு அருகாமையிலும் தியத்தலாவை மற்றும் பண்டாரவளைக்கு இடையில் 157 வது மைல்கல்லுக்கு அருகாமையிலும் புகையிரத பாதையில் இன்று  காலை பாரிய மரங்களும் மண்ணும் வீழ்ந்துள்ளன.


இக்காரணங்களினால் முறையான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, புகையிரத திணைக்கள ஊழியர்கள் மற்றும் தியத்தலாவ இராணுவ முகாமின் படையினர் மரங்களை வெட்டி மண்மேடுகளை அகற்றி புகையிரதத்தை விரைவாக இயக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

இதேவேளை, ஹப்புத்தளை பண்டாரவளை மற்றும் தியத்தலாவ பிரதேசங்களிலும் பல வீடுகள் காற்றினால் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.


மலையக புகையிரத சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு.  மலையக புகையிரத பாதையில் ஹப்புத்தளை - பண்டாரவளைக்கு இடையில் மரங்கள் மற்றும் மண் சரிந்து வீழ்ந்தமையினால் புகையிரத பாதை பாதிக்கப்பட்டுள்ளது.அதிக காற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஹப்புத்தளைக்கும் தியத்தலாவிற்கும் இடையிலான பாலத்திற்கு அருகாமையிலும் தியத்தலாவை மற்றும் பண்டாரவளைக்கு இடையில் 157 வது மைல்கல்லுக்கு அருகாமையிலும் புகையிரத பாதையில் இன்று  காலை பாரிய மரங்களும் மண்ணும் வீழ்ந்துள்ளன.இக்காரணங்களினால் முறையான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, புகையிரத திணைக்கள ஊழியர்கள் மற்றும் தியத்தலாவ இராணுவ முகாமின் படையினர் மரங்களை வெட்டி மண்மேடுகளை அகற்றி புகையிரதத்தை விரைவாக இயக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர்.இதேவேளை, ஹப்புத்தளை பண்டாரவளை மற்றும் தியத்தலாவ பிரதேசங்களிலும் பல வீடுகள் காற்றினால் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement