• Oct 06 2024

அரச இலக்கிய விருது வழங்கல் விழா தொடர்பில் வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Feb 15th 2024, 12:44 pm
image

Advertisement

'அரச இலக்கிய விருது வழங்கல் விழா - 2024' தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில்,

புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும அரச இலக்கிய விருது ஏற்பாட்டுக்குழு ஒன்றிணைந்து வருடா வருடம் ஏற்பாடு செய்யும் "அரச இலக்கிய விருது வழங்கல் விழா- 2024" தொடர்பாக எழுத்தாளர்கள் மற்றும் நூல் வெளியீற்றாளர்களிடமிருந்து, தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கில மொழிகளில் நூல்கள் விருதுக்காக கோரப்படுகின்றன. 

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முதற்பதிப்பாக வெளியிடப்பட்டதும்  49 பக்கங்களுக்கு குறையாததுமான அச்சிடப்பட்ட நூலின் மூன்று (03) பிரதிகள் விண்ணப்பப்படிவம் என்பவற்றை "அரச இலக்கிய ஆலோசனைக்குழு, கலாசார அலுவல்கள் திணைக்களம், 8 ஆம் மாடி, செத்ஸ்ரீபாய, பத்தரமுல்ல" என்ற முகவரிக்கு எதிர்வரும் 3 ஆம் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக நேரடியாகவோ அல்லது பதிவுத் தபாலிலோ அனுப்பி வைக்கவும்.

இவ்விடயம் தொடர்பான அறிவுறுத்தல் மற்றும் விண்ணப்ப படிவம் என்பவற்றை பிரதேச செயலகங்களில் பெற்று கொள்ளலாம் என யாழ் மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

அரச இலக்கிய விருது வழங்கல் விழா தொடர்பில் வெளியான அறிவிப்பு.samugammedia 'அரச இலக்கிய விருது வழங்கல் விழா - 2024' தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்தவகையில்,புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும அரச இலக்கிய விருது ஏற்பாட்டுக்குழு ஒன்றிணைந்து வருடா வருடம் ஏற்பாடு செய்யும் "அரச இலக்கிய விருது வழங்கல் விழா- 2024" தொடர்பாக எழுத்தாளர்கள் மற்றும் நூல் வெளியீற்றாளர்களிடமிருந்து, தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கில மொழிகளில் நூல்கள் விருதுக்காக கோரப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முதற்பதிப்பாக வெளியிடப்பட்டதும்  49 பக்கங்களுக்கு குறையாததுமான அச்சிடப்பட்ட நூலின் மூன்று (03) பிரதிகள் விண்ணப்பப்படிவம் என்பவற்றை "அரச இலக்கிய ஆலோசனைக்குழு, கலாசார அலுவல்கள் திணைக்களம், 8 ஆம் மாடி, செத்ஸ்ரீபாய, பத்தரமுல்ல" என்ற முகவரிக்கு எதிர்வரும் 3 ஆம் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக நேரடியாகவோ அல்லது பதிவுத் தபாலிலோ அனுப்பி வைக்கவும்.இவ்விடயம் தொடர்பான அறிவுறுத்தல் மற்றும் விண்ணப்ப படிவம் என்பவற்றை பிரதேச செயலகங்களில் பெற்று கொள்ளலாம் என யாழ் மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement