• Nov 22 2024

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு...!

Sharmi / Jun 11th 2024, 6:53 pm
image

லொறிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானது எனவும், வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாகனங்களை இறக்குமதி செய்யும் திகதியை அரசாங்கம் அறிவிக்கவில்லை எனவும், அது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அந்த இறக்குமதிகளை மேற்கொள்வது சாத்தியமா என்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, கனரக வாகன இறக்குமதி ஒக்டோபர் மாதம் இடம்பெறும் என பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு. லொறிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானது எனவும், வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வாகனங்களை இறக்குமதி செய்யும் திகதியை அரசாங்கம் அறிவிக்கவில்லை எனவும், அது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.அந்த இறக்குமதிகளை மேற்கொள்வது சாத்தியமா என்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.இதன்படி, கனரக வாகன இறக்குமதி ஒக்டோபர் மாதம் இடம்பெறும் என பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement