• Nov 26 2024

சித்திரை புத்தாண்டுக்கு முன் வெளிவரப்போகும் அறிவிப்பு..! - ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி

Chithra / Jan 15th 2024, 10:19 am
image

 

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக அறிவிப்போம். ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவார்கள் என கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஹரிசன் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியின் போது அரசாங்கத்தை பொறுப்பேற்காமல் தப்பிச் சென்றவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். 

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்  போட்டியிடும் தகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாத்திரமே உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசாங்கத்தை பொறுப்பேற்பதில் ஆசை. ஆனால் பயம்.

இவரது தயக்கத்துக்காக நாட்டை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது என்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்.

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக அறிவிப்போம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவார்கள். 

ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அதனை பகிரங்கமாக குறிப்பிட மறுக்கிறார்கள் என்றார்.

சித்திரை புத்தாண்டுக்கு முன் வெளிவரப்போகும் அறிவிப்பு. - ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி  சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக அறிவிப்போம். ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவார்கள் என கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஹரிசன் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பொருளாதார நெருக்கடியின் போது அரசாங்கத்தை பொறுப்பேற்காமல் தப்பிச் சென்றவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்  போட்டியிடும் தகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாத்திரமே உள்ளது.எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசாங்கத்தை பொறுப்பேற்பதில் ஆசை. ஆனால் பயம்.இவரது தயக்கத்துக்காக நாட்டை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது என்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்.சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக அறிவிப்போம்.ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவார்கள். ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அதனை பகிரங்கமாக குறிப்பிட மறுக்கிறார்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement