• May 02 2024

தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சியின் தீர்மானத்தில் திடீர் மாற்றம்..! மகிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Chithra / Jan 15th 2024, 9:37 am
image

Advertisement

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுள் காணப்படுவதாக அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராகப் போட்டியிடுவார் என கூறுகிறீர்களா என மகிந்தவிடம் வினவப்பட்டது. அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் என மகிந்த பதிலளித்துள்ளார்.

அப்படி என்றால் உங்களுடைய வேட்பாளர் யார் என மகிந்தவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை, 

ஒருவேளை எங்கள் கட்சியில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவும் கூடும் நிறுத்தப்படாமலும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சியின் தீர்மானத்தில் திடீர் மாற்றம். மகிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுள் காணப்படுவதாக அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராகப் போட்டியிடுவார் என கூறுகிறீர்களா என மகிந்தவிடம் வினவப்பட்டது. அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் என மகிந்த பதிலளித்துள்ளார்.அப்படி என்றால் உங்களுடைய வேட்பாளர் யார் என மகிந்தவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.அது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை, ஒருவேளை எங்கள் கட்சியில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவும் கூடும் நிறுத்தப்படாமலும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement