• May 20 2024

புனித சவேரியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா!

Sharmi / Dec 6th 2022, 2:21 pm
image

Advertisement

சிலாபம் மறை மாவட்டத்திற்குட்பட்ட கட்டைக்காட்டு கிராமத்தில் 160 வருடங்கள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவலாயத்தின் வருடாந்த திருவிழாவும் திருப்பலி பூஜையும் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

பங்குத் தந்தை அருப்பணி.வின்சன் ஜெயராசா அடிகளார் தலைமையில்  காலை 8.00 மணியளவில் திருவிழாவும் திருப்பலியும் இடம் பெற்றது.

கடந்த நம்பர் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 08 நாட்கள் நவநாள் ஆராதனைகள் இடம் பெற்று வந்த நிலையில் கடந்த 02 ஆம் திகதி மாலை ஆராதனை இடம்பெற்றது.
 
இந்த நிலையில், காலை 8.00 மணியளவில் அருட் தந்தையர்கள் உள்ளிட்டவர்கள் பேன்ட் வாத்தியங்களுடன் திருவிழா திருப் பலி பூஜையை நிறைவேறும் திருப்பலி பீடத்தற்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் பங்குத் தந்தை அருப்பணி-வின்சன் ஜெயராசா அடிகளார் தலைமையில் நடை பெற்ற திருவிழா திருப்பலிப் பூஜையை அமலமரிய தியாகிகள் சபையின் அருப் பணி- அமீர்த்தராஜ் அடிகளினாரினால் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இறுதியில் புனித சவேரியாரின் திரு சுரூப பவனி உள்வீதி வலம் வந்ததுடன் ஆசிவாதமும் இடம் பெற்றது. திருவிழா திருப்பலி பூஜையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட அடிகளார் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


புனித சவேரியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா சிலாபம் மறை மாவட்டத்திற்குட்பட்ட கட்டைக்காட்டு கிராமத்தில் 160 வருடங்கள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவலாயத்தின் வருடாந்த திருவிழாவும் திருப்பலி பூஜையும் வெகு விமர்சையாக இடம்பெற்றது.பங்குத் தந்தை அருப்பணி.வின்சன் ஜெயராசா அடிகளார் தலைமையில்  காலை 8.00 மணியளவில் திருவிழாவும் திருப்பலியும் இடம் பெற்றது.கடந்த நம்பர் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 08 நாட்கள் நவநாள் ஆராதனைகள் இடம் பெற்று வந்த நிலையில் கடந்த 02 ஆம் திகதி மாலை ஆராதனை இடம்பெற்றது. இந்த நிலையில், காலை 8.00 மணியளவில் அருட் தந்தையர்கள் உள்ளிட்டவர்கள் பேன்ட் வாத்தியங்களுடன் திருவிழா திருப் பலி பூஜையை நிறைவேறும் திருப்பலி பீடத்தற்கு அழைத்து வரப்பட்டனர்.பின்னர் பங்குத் தந்தை அருப்பணி-வின்சன் ஜெயராசா அடிகளார் தலைமையில் நடை பெற்ற திருவிழா திருப்பலிப் பூஜையை அமலமரிய தியாகிகள் சபையின் அருப் பணி- அமீர்த்தராஜ் அடிகளினாரினால் ஒப்புக் கொடுக்கப்பட்டது.இறுதியில் புனித சவேரியாரின் திரு சுரூப பவனி உள்வீதி வலம் வந்ததுடன் ஆசிவாதமும் இடம் பெற்றது. திருவிழா திருப்பலி பூஜையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட அடிகளார் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement