• Apr 25 2025

இலங்கை தொழுநோயாளர் மறுவாழ்வு சங்கத்தின் வருடாந்த மீளாய்வு கூட்டம்!

Chithra / Apr 24th 2025, 3:18 pm
image

 

காவேரி கலா மன்றத்தின் வழிகாட்டலில் இலங்கை தொழுநோயாளர் மறுவாழ்வு சங்கத்தின் கிராமமட்ட சங்கங்களின் வருடாந்த மீளாய்வு கூட்டமானது நேற்றும் இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

கூட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களில் 22 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் 2024ஆம் ஆண்டு தனது சங்கங்களின் செயற்பாட்டு மீளாய்வும், 2025 தொடக்கம் 2026 ஆம் ஆண்டுகளுக்கான செயற்பாட்டு விடயங்களும் குறித்து ஆய்வு நடாத்தப்பட்டு திட்ட அறிக்கைகளும் திட்ட முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன. மேலும் மாவட்டமட்ட சங்கங்களின் மாநாட்டுக்கான ஆயத்தப்படுத்தல்கள் நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இலங்கை தொழுநோயாளர் மறுவாழ்வு சங்கம் தேசிய மட்டத்தில் இலங்கை முழுவதும் தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் நலன் சார்ந்த விடயங்களுக்காக மாவட்ட மற்றும் கிராமமட்ட செயற்குழுக்களை அமைத்து அவர்களின் தேவைகளுக்காக சேவைகளை வழங்கி வருகின்றது.

உலக சுகாதார நிறுவனம் தொழில்நுயாளர் சங்கங்களின் வினைத்திறனான செயற்பாடுகளால் மட்டுமே தொழுநோய் பரவுவது கட்டுப்பாட்டுக்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க முடியும் என்பதை வலியுறுத்தி வருகின்றது.

இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில்தான் இலங்கை தொழுநோயாளர்  சங்கம் தேசிய மற்றும் மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் ஏனைய சுகாதார மற்றும் சமூக சேவை அமைப்புகளிட இணைந்து செயலாற்றி வருகின்றது இதன் அடிப்படையில் கிராமம் மட்ட தொழு நோயாளர் மறுவாழ்வு சங்கங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை தொழுநோயாளர் மறுவாழ்வு சங்கத்தின் வருடாந்த மீளாய்வு கூட்டம்  காவேரி கலா மன்றத்தின் வழிகாட்டலில் இலங்கை தொழுநோயாளர் மறுவாழ்வு சங்கத்தின் கிராமமட்ட சங்கங்களின் வருடாந்த மீளாய்வு கூட்டமானது நேற்றும் இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.கூட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களில் 22 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் 2024ஆம் ஆண்டு தனது சங்கங்களின் செயற்பாட்டு மீளாய்வும், 2025 தொடக்கம் 2026 ஆம் ஆண்டுகளுக்கான செயற்பாட்டு விடயங்களும் குறித்து ஆய்வு நடாத்தப்பட்டு திட்ட அறிக்கைகளும் திட்ட முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன. மேலும் மாவட்டமட்ட சங்கங்களின் மாநாட்டுக்கான ஆயத்தப்படுத்தல்கள் நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.இலங்கை தொழுநோயாளர் மறுவாழ்வு சங்கம் தேசிய மட்டத்தில் இலங்கை முழுவதும் தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் நலன் சார்ந்த விடயங்களுக்காக மாவட்ட மற்றும் கிராமமட்ட செயற்குழுக்களை அமைத்து அவர்களின் தேவைகளுக்காக சேவைகளை வழங்கி வருகின்றது.உலக சுகாதார நிறுவனம் தொழில்நுயாளர் சங்கங்களின் வினைத்திறனான செயற்பாடுகளால் மட்டுமே தொழுநோய் பரவுவது கட்டுப்பாட்டுக்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க முடியும் என்பதை வலியுறுத்தி வருகின்றது.இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில்தான் இலங்கை தொழுநோயாளர்  சங்கம் தேசிய மற்றும் மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் ஏனைய சுகாதார மற்றும் சமூக சேவை அமைப்புகளிட இணைந்து செயலாற்றி வருகின்றது இதன் அடிப்படையில் கிராமம் மட்ட தொழு நோயாளர் மறுவாழ்வு சங்கங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement