• May 29 2025

மீண்டும் ஒரு தேர்தல்: பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம்

Chithra / May 27th 2025, 12:01 pm
image


மாகாண சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த சட்டமூலம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தனி உறுப்பினர் முன்மொழிவாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது உள்ள தடைகளை நீக்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும். 

அடுத்த பாராளுமன்ற அமர்வில் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  தெரிவித்தார்.

இந்நிலையில் பாராளுமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

மீண்டும் ஒரு தேர்தல்: பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம் மாகாண சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தனி உறுப்பினர் முன்மொழிவாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது உள்ள தடைகளை நீக்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும். அடுத்த பாராளுமன்ற அமர்வில் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  தெரிவித்தார்.இந்நிலையில் பாராளுமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement