• Nov 28 2024

அநுர அரசு ஒருபோதும் ஊடகங்களை ஒடுக்காது! அமைச்சரவைப் பேச்சாளர் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்புக்கள்

Chithra / Nov 6th 2024, 12:12 pm
image

 

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும்  என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது நாடாளுமன்றம் ஒன்று இல்லை. எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது அல்லது திருத்துவது குறித்த நடவடிக்கைகளை எடுக்க முடியாது. 

இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கிறது. 

எனினும் இந்த விடயத்தில் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் போது உரிய தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

மேலும் சமஷ்டி அரசியலமைப்பு ஒருபோதும் நாட்டில் உருவாக்கப்பட மாட்டாதெனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை ஒருபோதும் ஒடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஊடகங்களை ஒருபோதும் அச்சுறுத்த மாட்டார் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும் முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அந்தச் சட்டம் எக்காரணத்துக்காகவும் திருத்தப்படமாட்டது என்றும் தெரிவித்தார். 

சமயங்களில் சார்ந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சமய தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடியே அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அந்த சட்டத்தை திருத்த அரசாங்கம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்குமென்று அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, இந்த சட்டத்தை திருத்துவதா அல்லது அதற்கு மாற்றீடாக புதிய சட்டமொன்றை உருவாக்குவதா என்பது குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணியின் மொத்தத் தேவை சுமார் 11.82 மில்லியன் மீற்றராகும். 

முழுத் தொகையையும் நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவனத்தினால் இந்தத் துணி கையிருப்பு தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட மாதிரியை பரிசோதித்ததன் பின்னர், அந்தத் துணி பாடசாலை மாணவர்களின் பாவனைக்கு ஏற்றது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீன அரசின் வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெறவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கீழுள்ள இலங்கை துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள காலிமுகத்திடல் மைதானத்தை மதம் சார்ந்த நோக்கங்கள் தவிர, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கக் கூடாது என தீர்மானம் எட்டப்பட்டது.


அநுர அரசு ஒருபோதும் ஊடகங்களை ஒடுக்காது அமைச்சரவைப் பேச்சாளர் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்புக்கள்  பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பாக புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும்  என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தற்போது நாடாளுமன்றம் ஒன்று இல்லை. எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது அல்லது திருத்துவது குறித்த நடவடிக்கைகளை எடுக்க முடியாது. இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கிறது. எனினும் இந்த விடயத்தில் புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் போது உரிய தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.மேலும் சமஷ்டி அரசியலமைப்பு ஒருபோதும் நாட்டில் உருவாக்கப்பட மாட்டாதெனவும் தெரிவித்துள்ளது.இதேவேளை தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை ஒருபோதும் ஒடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஊடகங்களை ஒருபோதும் அச்சுறுத்த மாட்டார் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அந்தச் சட்டம் எக்காரணத்துக்காகவும் திருத்தப்படமாட்டது என்றும் தெரிவித்தார். சமயங்களில் சார்ந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சமய தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடியே அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அந்த சட்டத்தை திருத்த அரசாங்கம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்குமென்று அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.அதேபோன்று, இந்த சட்டத்தை திருத்துவதா அல்லது அதற்கு மாற்றீடாக புதிய சட்டமொன்றை உருவாக்குவதா என்பது குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இதேவேளை 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணியின் மொத்தத் தேவை சுமார் 11.82 மில்லியன் மீற்றராகும். முழுத் தொகையையும் நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவனத்தினால் இந்தத் துணி கையிருப்பு தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட மாதிரியை பரிசோதித்ததன் பின்னர், அந்தத் துணி பாடசாலை மாணவர்களின் பாவனைக்கு ஏற்றது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அத்துடன் மேல் மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீன அரசின் வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெறவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கீழுள்ள இலங்கை துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள காலிமுகத்திடல் மைதானத்தை மதம் சார்ந்த நோக்கங்கள் தவிர, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கக் கூடாது என தீர்மானம் எட்டப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement