தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார்நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இச் சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.
நிஹால் அபேசிங்க ஏற்றுவதற்காக நாடாளுமன்றம் சென்ற வேளையில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சாரதி ஆபத்து இன்றி பாதுகாப்பாக, நாடாளுமன்ற ஊழியர்களினால் மீட்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட செயலமர்வில் கலந்து கொள்வதற்காக நிஹால் அபேசிங்க சென்றிருந்தார்.
கடும் மழை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த அநுர கட்சி எம்.பியின் கார் தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார்நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.நிஹால் அபேசிங்க ஏற்றுவதற்காக நாடாளுமன்றம் சென்ற வேளையில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சாரதி ஆபத்து இன்றி பாதுகாப்பாக, நாடாளுமன்ற ஊழியர்களினால் மீட்கப்பட்டுள்ளார்.நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட செயலமர்வில் கலந்து கொள்வதற்காக நிஹால் அபேசிங்க சென்றிருந்தார்.கடும் மழை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.