• Nov 19 2024

முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவு - அநுர, சஜித், ரணில் பெற்ற மொத்த வாக்குகள்!

Tamil nila / Sep 22nd 2024, 5:03 pm
image

2024 ஜனாதிபதி தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.

இந்த முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ஷ 342,781 வாக்குகளுடனும் மற்றும் பா.அரிய நேத்திரன் 226,342 வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

122,396 வாக்குகளை பெற்று திலித் ஜயவீர 6 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

கே.கே பியதாச 47,528 வாக்குகளை பெற்று 7 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால்  இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவு - அநுர, சஜித், ரணில் பெற்ற மொத்த வாக்குகள் 2024 ஜனாதிபதி தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.இந்த முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ஷ 342,781 வாக்குகளுடனும் மற்றும் பா.அரிய நேத்திரன் 226,342 வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.122,396 வாக்குகளை பெற்று திலித் ஜயவீர 6 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.கே.கே பியதாச 47,528 வாக்குகளை பெற்று 7 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால்  இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement