• Nov 26 2024

சட்டவிரோதமாக உயர் பதவிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் அனுரவின் அரசாங்கத்தில் இரத்து...!

Sharmi / Mar 2nd 2024, 9:48 am
image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டவிரோதமாக உயர்பதவிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானதெனவும் குறித்த நியமனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ்,  உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வழங்கப்பட்டதாக கூறப்படும் அனைத்து நியமனங்களும் இரத்துச் செய்யப்படும் எனவும்   சட்டவிரோத நியமனங்களை வலுக்கட்டாயமாக இரத்துச் செய்ய முடியாது. எனவே உரிய சட்ட நடைமுறைகள் மூலம் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.




சட்டவிரோதமாக உயர் பதவிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் அனுரவின் அரசாங்கத்தில் இரத்து. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டவிரோதமாக உயர்பதவிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானதெனவும் குறித்த நியமனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ்,  உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வழங்கப்பட்டதாக கூறப்படும் அனைத்து நியமனங்களும் இரத்துச் செய்யப்படும் எனவும்   சட்டவிரோத நியமனங்களை வலுக்கட்டாயமாக இரத்துச் செய்ய முடியாது. எனவே உரிய சட்ட நடைமுறைகள் மூலம் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement