ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று இரவு அமெரிக்காவை சென்றடைந்துள்ளார்.
அமெரிக்க நேரப்படி காலை 8:50 மணியளவில் அமெரிக்காவின் ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் அவரது குழுவினர் வரவேற்றுள்ளனர்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளார்.
கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது அமர்வில் உரையாற்றவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சென்றடைந்த அநுரவுக்கு பலத்த வரவேற்பு; இன்று ஐ.நா.வில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று இரவு அமெரிக்காவை சென்றடைந்துள்ளார். அமெரிக்க நேரப்படி காலை 8:50 மணியளவில் அமெரிக்காவின் ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் அவரது குழுவினர் வரவேற்றுள்ளனர். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளார்.கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது அமர்வில் உரையாற்றவுள்ளார்.இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.