• Oct 06 2024

வட மாகாணத்தைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்...!

Sharmi / Jul 8th 2024, 8:43 pm
image

Advertisement

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகள் 13 பேருக்கு இன்றையதினம்(08) ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. 

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆளுநரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு  நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,

தாம் கற்றுக்கொண்ட நுட்பங்களை பாடசாலைகளில் பயன்படுத்தி, கற்பித்தல் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அதனூடாக கல்வித் தரத்தை பேணுவதுடன், மாணவர்கள் இலகுவாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

மாணவர்கள் பாடசாலைக்கு விரும்பி வருகை தரும் வகையில் வகுப்பறைகள் மாற்றப்பட வேண்டும். 

அதேவேளை, மாணவர்களின் முன்மாதிரிகளாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  

வடக்கிலுள்ள ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளுக்கு இன்று நியமனம் வழங்கப்பட்ட புதிய ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஆசிரியர்கள், தங்களுக்கு நியமனம் வழங்கப்படும் பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







வட மாகாணத்தைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகள் 13 பேருக்கு இன்றையதினம்(08) ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆளுநரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு  நடைபெற்றது.இதன்போது உரையாற்றிய வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,தாம் கற்றுக்கொண்ட நுட்பங்களை பாடசாலைகளில் பயன்படுத்தி, கற்பித்தல் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.அதனூடாக கல்வித் தரத்தை பேணுவதுடன், மாணவர்கள் இலகுவாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.மாணவர்கள் பாடசாலைக்கு விரும்பி வருகை தரும் வகையில் வகுப்பறைகள் மாற்றப்பட வேண்டும். அதேவேளை, மாணவர்களின் முன்மாதிரிகளாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  வடக்கிலுள்ள ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளுக்கு இன்று நியமனம் வழங்கப்பட்ட புதிய ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஆசிரியர்கள், தங்களுக்கு நியமனம் வழங்கப்படும் பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement