• Sep 20 2024

குடும்பமொன்றுக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள வீடொன்றை கையளித்த இராணுவத்தினர்

Chithra / Aug 25th 2024, 3:30 pm
image

Advertisement


கிளிநொச்சியில்  55 படைப்பிரிவு இராணுவத்தின் நிதிப்பங்களிப்பில் வறிய  குடும்பம் ஒன்றுக்கு 12 லட்சம் மதிப்புள்ள நிரந்தரமான வீடு கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  புளியம்பொக்கனை கிராம அலுவலக பிரிவில் உள்ள வறிய குடும்பம் ஒன்றுக்கே இவ்வாறு இராணுவத்தின் நிதியிலிருந்து 12 லட்சம் மதிப்புள்ள நிரந்தரமான வீடு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று 25.08.2024 இடம்பெற்றது. 

இலங்கை இராணுவத் தளபதி விக்கும்  லியனகேவால் இன்று குறித்த வீட்டு  உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது. 

இன்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க அதிபர் முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர்  பிருந்தாகரன், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்  என பலரும் கலந்துகொண்டனர்.


குடும்பமொன்றுக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள வீடொன்றை கையளித்த இராணுவத்தினர் கிளிநொச்சியில்  55 படைப்பிரிவு இராணுவத்தின் நிதிப்பங்களிப்பில் வறிய  குடும்பம் ஒன்றுக்கு 12 லட்சம் மதிப்புள்ள நிரந்தரமான வீடு கையளிக்கப்பட்டது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  புளியம்பொக்கனை கிராம அலுவலக பிரிவில் உள்ள வறிய குடும்பம் ஒன்றுக்கே இவ்வாறு இராணுவத்தின் நிதியிலிருந்து 12 லட்சம் மதிப்புள்ள நிரந்தரமான வீடு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.குறித்த நிகழ்வு இன்று 25.08.2024 இடம்பெற்றது. இலங்கை இராணுவத் தளபதி விக்கும்  லியனகேவால் இன்று குறித்த வீட்டு  உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது. இன்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க அதிபர் முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர்  பிருந்தாகரன், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்  என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement