• Nov 24 2024

ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சியின் ஆதரவு யாருக்கு? சுமந்திரன் வெளியிட்ட தகவல்

Chithra / Aug 25th 2024, 3:15 pm
image

 

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்  தெரிவித்துள்ளார். 

திருகோணமலையில் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

”பலர் என்னிடம் வினவும் ஒரு வினாவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர்.

பலமான பல அழுத்தங்களை கொண்டதும் மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் சமதூரத்தில் வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். 

தீர்க்கமான முடிவின் பின் யாருக்கு ஏன் ஆதரவளிப்போம் என கூறிய போது அதற்கான காரணங்களையும் முன்வைப்போம்.

அதன் பின் நீங்களும் பூரண ஆதரவை அளிக்கலாம். மக்கள் மத்தியில் தெளிவாக, காரணங்களுடன் அறிவிப்போம். 

மூன்று வேட்பாளர்களுக்கும் நன்கு தெரியும் எமது மக்களுடைய வாக்குகள் தேவை என்று. இதனால் பேரம் பேசும் சக்தியாக அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என்பதை மத்திய செயற்குழுவிற்கு அறிவித்துள்ளேன்.

எம்மை பற்றிய நிலவரங்களை சிங்கள மக்களுக்கே அவர்களாகவே புரியக்கூடிய வகையில் அறிவிக்க கூடிய நிலை இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறேன். 

அதன் பின் கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்” என கூறியுள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சியின் ஆதரவு யாருக்கு சுமந்திரன் வெளியிட்ட தகவல்  ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்  தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது, தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,”பலர் என்னிடம் வினவும் ஒரு வினாவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர்.பலமான பல அழுத்தங்களை கொண்டதும் மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் சமதூரத்தில் வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். தீர்க்கமான முடிவின் பின் யாருக்கு ஏன் ஆதரவளிப்போம் என கூறிய போது அதற்கான காரணங்களையும் முன்வைப்போம்.அதன் பின் நீங்களும் பூரண ஆதரவை அளிக்கலாம். மக்கள் மத்தியில் தெளிவாக, காரணங்களுடன் அறிவிப்போம். மூன்று வேட்பாளர்களுக்கும் நன்கு தெரியும் எமது மக்களுடைய வாக்குகள் தேவை என்று. இதனால் பேரம் பேசும் சக்தியாக அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என்பதை மத்திய செயற்குழுவிற்கு அறிவித்துள்ளேன்.எம்மை பற்றிய நிலவரங்களை சிங்கள மக்களுக்கே அவர்களாகவே புரியக்கூடிய வகையில் அறிவிக்க கூடிய நிலை இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறேன். அதன் பின் கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்” என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement