எதிர்வரும் பெரும்போக அறுவடைக்கு தயாராகும் பொருட்டு இலங்கை இராணுவம் நாடு தழுவிய ரீதியில் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
நேற்று முதல் 27 ஆம் திகதி வரை இயங்கும் இந்த முயற்சி,
நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் 209 நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்குகளை தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
துப்புரவு நடவடிக்கைகள் நேற்று பல இடங்களில் ஆரம்பமாகியுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகம் இந்த முயற்சியை ஒருங்கிணைத்துள்ளது.
இந்த நடவடிக்கையானது, பெரும்போக அறுவடையின் போது கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமிப்பதற்கான அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
நாடு தழுவிய ரீதியில் நெல் களஞ்சியசாலைகள் துப்பரவு பணிகளில் இராணுவம் எதிர்வரும் பெரும்போக அறுவடைக்கு தயாராகும் பொருட்டு இலங்கை இராணுவம் நாடு தழுவிய ரீதியில் நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. நேற்று முதல் 27 ஆம் திகதி வரை இயங்கும் இந்த முயற்சி,நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் 209 நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்குகளை தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.துப்புரவு நடவடிக்கைகள் நேற்று பல இடங்களில் ஆரம்பமாகியுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகம் இந்த முயற்சியை ஒருங்கிணைத்துள்ளது.இந்த நடவடிக்கையானது, பெரும்போக அறுவடையின் போது கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமிப்பதற்கான அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும்.