திருகோணமலை மாவட்டத்தில் பாராளமன்ற தேர்தலை சுமுகமான முறையில் நடாத்துவதற்கு,
சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
திருகோணலை மாவட்டத்தின் பொதுத்தேர்தல் நிலவரம் தொடர்பாக இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர், இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அமைதியாகவும் சுமுகமாகவும் தேர்தலை நடாத்தி முடிப்பதற்கு 1667 பொலிசார் பாதுகாப்பு கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (13) காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டதாகவும் மாலை 2.00 மணிக்கு முன்னர் வாக்குப் பெட்டிகள் உரிய வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மாவட்டத்தில் 318 வாக்களிப்பு நிலையங்களும் 36 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நிலையமாகவும், வாக்கெண்ணும் மத்திய நிலையமாக திருகோணமலை விபுலானந்த கல்லூரி செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், வாக்கெண்ணும் மற்றும் வாக்களிப்பு நிலையங்களின் கடமைகளுக்காக 4666 அரச உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார
மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாடு அலுவலகங்களுக்கு இன்று வரை 63 தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி, மாலை 04.15 மணியளவில் ஆரம்பமாகும் என்றும், பிரதான வாக்குகளை எண்ணும் பணிகளை இரவு 7 மணிக்கு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும்,தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிசார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனையதரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
வாக்களிக்கும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் யாவும் பொலிஸ் பாதுகாப்புடன், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.
மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர். சசிலன் மற்றும் அஞ்சல் வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் எஸ். கே. டி. நிரஞ்சன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ், வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் மூதூர் தேர்தல் தொகுதியில் இருந்து 123,363 வாக்காளர்களும்,
திருகோணமலை தேர்தல் தொகுதியில் இருந்து 105,005 வாக்காளர்களும், சேருவில தேர்தல் தொகுதியில் இருந்து 87,557 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை சுமுகமாக நடாத்துவதற்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி - மாவட்ட அரசாங்க அதிபர் திருகோணமலை மாவட்டத்தில் பாராளமன்ற தேர்தலை சுமுகமான முறையில் நடாத்துவதற்கு, சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.திருகோணலை மாவட்டத்தின் பொதுத்தேர்தல் நிலவரம் தொடர்பாக இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர், இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அமைதியாகவும் சுமுகமாகவும் தேர்தலை நடாத்தி முடிப்பதற்கு 1667 பொலிசார் பாதுகாப்பு கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.திருகோணமலை மாவட்டத்தில் சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (13) காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டதாகவும் மாலை 2.00 மணிக்கு முன்னர் வாக்குப் பெட்டிகள் உரிய வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த மாவட்டத்தில் 318 வாக்களிப்பு நிலையங்களும் 36 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நிலையமாகவும், வாக்கெண்ணும் மத்திய நிலையமாக திருகோணமலை விபுலானந்த கல்லூரி செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.மேலும், வாக்கெண்ணும் மற்றும் வாக்களிப்பு நிலையங்களின் கடமைகளுக்காக 4666 அரச உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தாரமாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாடு அலுவலகங்களுக்கு இன்று வரை 63 தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி, மாலை 04.15 மணியளவில் ஆரம்பமாகும் என்றும், பிரதான வாக்குகளை எண்ணும் பணிகளை இரவு 7 மணிக்கு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும்,தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிசார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனையதரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.வாக்களிக்கும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் யாவும் பொலிஸ் பாதுகாப்புடன், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர். சசிலன் மற்றும் அஞ்சல் வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் எஸ். கே. டி. நிரஞ்சன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ், வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.திருகோணமலை மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் மூதூர் தேர்தல் தொகுதியில் இருந்து 123,363 வாக்காளர்களும்,திருகோணமலை தேர்தல் தொகுதியில் இருந்து 105,005 வாக்காளர்களும், சேருவில தேர்தல் தொகுதியில் இருந்து 87,557 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.