• May 20 2024

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை! நீதிமன்றம் அதிரடி SamugamMedia

Chithra / Mar 13th 2023, 10:55 am
image

Advertisement

இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்த போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக குருந்துவத்தை பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகத் தவறியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே அவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

விமல் வீரவங்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, ரொஜர் செனவிரத்ன, மொஹமட் முஸம்மில், பியசிறி விஜேநாயக்க ஆகிய 7 பேர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதுடன், விமல் வீரவன்சவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாததைக் கருத்தில் கொண்டு, பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்துள்ளதோடு, வழக்கு விசாரணை எதிர்வரும் 19ம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை நீதிமன்றம் அதிரடி SamugamMedia இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்த போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக குருந்துவத்தை பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகத் தவறியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்துள்ளார்.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே அவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.விமல் வீரவங்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, ரொஜர் செனவிரத்ன, மொஹமட் முஸம்மில், பியசிறி விஜேநாயக்க ஆகிய 7 பேர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதுடன், விமல் வீரவன்சவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாததைக் கருத்தில் கொண்டு, பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்துள்ளதோடு, வழக்கு விசாரணை எதிர்வரும் 19ம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement