• Mar 19 2025

சம்மாந்துறையில் நாய்களுக்கு ARV தடுப்பூசி..!

Sharmi / Mar 19th 2025, 11:36 am
image

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  செந்நெல் கிராமத்தில் 56 நாய்களுக்கு ARV (Anti Rabies vaccine) தடுப்பூசி இன்றும் வழங்கப்பட்டது.

விசர் நாய்க்கடி தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன்  ஆலோசனையின் பிரகாரம்   சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத்  வழிகாட்டலில்  தொடர்ச்சியாக பொது மக்களின் சுகாதார பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் 56 நாய்களுக்கு ARV (Anti Rabies vaccine) தடுப்பூசி வழங்கப்பட்டது.

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பின் நிமிர்த்தம் இலவச சேவை நடைமுறைப்படுத்தப்படுவதுடன்  வீரமுனைப் பகுதியில்  60 நாய்களுக்கும் ARV தடுப்பூசி வழங்கப்பட்டது. இதில் 38 வளர்ப்பு  நாய்களாகும்.தடுப்பூசி வழங்குனர் முகமட் பஸ்லீன் உதவியுடன் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அத்துடன் உங்களது நாய்,  பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமாயின், உங்களது பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரினூடாக இலவச சேவையைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இம்முன்னெடுப்பானது   சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் கடந்த மார்ச்  புதன்கிழமை(12) பதிவாகி இருந்தது.

இதற்கமைய 7 பேருக்கு கடித்த நாயின் மாதிரி அறிக்கை Rabies positive என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இனால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சம்மாந்துறையில் நாய்களுக்கு ARV தடுப்பூசி. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  செந்நெல் கிராமத்தில் 56 நாய்களுக்கு ARV (Anti Rabies vaccine) தடுப்பூசி இன்றும் வழங்கப்பட்டது.விசர் நாய்க்கடி தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன்  ஆலோசனையின் பிரகாரம்   சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத்  வழிகாட்டலில்  தொடர்ச்சியாக பொது மக்களின் சுகாதார பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் 56 நாய்களுக்கு ARV (Anti Rabies vaccine) தடுப்பூசி வழங்கப்பட்டது.பொது மக்களின் சுகாதார பாதுகாப்பின் நிமிர்த்தம் இலவச சேவை நடைமுறைப்படுத்தப்படுவதுடன்  வீரமுனைப் பகுதியில்  60 நாய்களுக்கும் ARV தடுப்பூசி வழங்கப்பட்டது. இதில் 38 வளர்ப்பு  நாய்களாகும்.தடுப்பூசி வழங்குனர் முகமட் பஸ்லீன் உதவியுடன் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.அத்துடன் உங்களது நாய்,  பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமாயின், உங்களது பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரினூடாக இலவச சேவையைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.மேலும் இம்முன்னெடுப்பானது   சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் கடந்த மார்ச்  புதன்கிழமை(12) பதிவாகி இருந்தது.இதற்கமைய 7 பேருக்கு கடித்த நாயின் மாதிரி அறிக்கை Rabies positive என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இனால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement