• May 20 2024

மூக்கு முட்ட குடித்த பின் பனை மரத்தின் உச்சியில் உறங்கிய ஆசாமி - பாடுபட்டு மீட்ட தீயணைப்பு பிரிவினர்..!samugammedia

Sharmi / May 17th 2023, 1:50 pm
image

Advertisement

குடி போதையில் பனை மரத்தின் உச்சியில் தூங்கிய போதை ஆசாமியை மிட்ட சம்பவம் ஒன்று நகைப்புட கூடிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பொள்ளாச்சி அருகே இடம்பெற்றுள்ளது.
 
செம்பனாம்பட்டி என்ற கிராமத்தினை சேர்ந்த 42 வயதான லட்சுமணன் என்பவர் தென்னை, பனை மரங்களில் ஏறி காய்களைப் பறிக்கும் தொழிலில் ஈட்டுவருகின்றார்.

இந்நிலையில், ஒரு நாள்  லட்சுமணன் ஜமீன் கோட்டாம்பட்டி என்ற ஊரில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வேளையில்  முழு குடி போதையில் பனைமர உச்சிக்கு எறியுள்ளார். பின்னர் பனை மட்டைகளுக்கு நடுவே மிகவும் வசதியாக தூங்கியுள்ளார்.

இவ்வாறு தூங்கிக்கொண்டு இருக்கையில் சிறிதளவு போதை தெளிந்ததும் விழித்துக் கொண்ட லட்சுமணன், பயந்துபோய் அலறியடித்துள்ளார்.

அதனை அந்த வழியே சென்றவர்கள் அவதானித்த நிலையில் போலிஸாரிற்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் லட்சுமணனை மீட்க முயற்சிகள் செய்த போதிலும் அது தோல்வியில் முடிய  தீயணைப்புத் துறைக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, உயரே நீண்டு செல்லும் கூண்டுடன் கூடிய தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு ஒரு வழியாக லட்சுமணன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


மூக்கு முட்ட குடித்த பின் பனை மரத்தின் உச்சியில் உறங்கிய ஆசாமி - பாடுபட்டு மீட்ட தீயணைப்பு பிரிவினர்.samugammedia குடி போதையில் பனை மரத்தின் உச்சியில் தூங்கிய போதை ஆசாமியை மிட்ட சம்பவம் ஒன்று நகைப்புட கூடிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பொள்ளாச்சி அருகே இடம்பெற்றுள்ளது.  செம்பனாம்பட்டி என்ற கிராமத்தினை சேர்ந்த 42 வயதான லட்சுமணன் என்பவர் தென்னை, பனை மரங்களில் ஏறி காய்களைப் பறிக்கும் தொழிலில் ஈட்டுவருகின்றார். இந்நிலையில், ஒரு நாள்  லட்சுமணன் ஜமீன் கோட்டாம்பட்டி என்ற ஊரில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வேளையில்  முழு குடி போதையில் பனைமர உச்சிக்கு எறியுள்ளார். பின்னர் பனை மட்டைகளுக்கு நடுவே மிகவும் வசதியாக தூங்கியுள்ளார். இவ்வாறு தூங்கிக்கொண்டு இருக்கையில் சிறிதளவு போதை தெளிந்ததும் விழித்துக் கொண்ட லட்சுமணன், பயந்துபோய் அலறியடித்துள்ளார். அதனை அந்த வழியே சென்றவர்கள் அவதானித்த நிலையில் போலிஸாரிற்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொலிஸார் லட்சுமணனை மீட்க முயற்சிகள் செய்த போதிலும் அது தோல்வியில் முடிய  தீயணைப்புத் துறைக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதையடுத்து, உயரே நீண்டு செல்லும் கூண்டுடன் கூடிய தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு ஒரு வழியாக லட்சுமணன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement