• Nov 28 2024

தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மலையக குயில் அசானி நாடு திரும்பினார்..!

Chithra / Dec 18th 2023, 5:39 pm
image



சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மலையகத்தை சேர்ந்த அசானி இன்று காலை நாடு திரும்பினார்.

ஆரம்பத்தில் 28 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்ட இந்த போட்டியில், ஒவ்வொரு கட்டத்திலும் சில போட்டியாளர்கள் வெளியேறி கடைசியாக ரிஷிதா ஜவகர், கில்மிஷா, சஞ்சனா, ருத்தேஷ்குமார், கனிஷ்கர் மற்றும் கவின் என ஆறு பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருந்தனர்.

இந்த போட்டியில் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றியாளரை அறிவித்து 10 இலட்சம் இந்திய ரூபாய்க்கான காசோலையை கில்மிஷாவுக்கு வழங்கினார். 

ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே இறுதிச்சுற்றில் இலங்கையை சேர்ந்த கில்மிஷா வெற்றிப்பெற்றார்.

அத்தோடு கண்டியை சேர்ந்த அசானியும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.

அசானி அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தமை மலைய மக்களுக்கே கிடைத்த பெருமையாகும்.

போட்டியில் பங்கு பற்றிய அசானி, இலங்கை தமிழர்களை தாண்டி தமிழக மக்கள் மனதிலும் இடம்பிடித்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.

அது மட்டுமல்லாது   சரிகமப நிகழ்வில் பங்கு பற்றியதன் ஊடாக  மலையக மக்கள் படும் இனனல்களை  உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார் அசானி.    

அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறந்த போட்டியாளராவார்.

இந்நிலையில் சரிகமப இறுதிப் போட்டி நேற்று நிறைவுபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற அசானி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தின் ஊடாக, இன்று காலை நாடு திரும்பினார்.


தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மலையக குயில் அசானி நாடு திரும்பினார். சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மலையகத்தை சேர்ந்த அசானி இன்று காலை நாடு திரும்பினார்.ஆரம்பத்தில் 28 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்ட இந்த போட்டியில், ஒவ்வொரு கட்டத்திலும் சில போட்டியாளர்கள் வெளியேறி கடைசியாக ரிஷிதா ஜவகர், கில்மிஷா, சஞ்சனா, ருத்தேஷ்குமார், கனிஷ்கர் மற்றும் கவின் என ஆறு பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருந்தனர்.இந்த போட்டியில் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றியாளரை அறிவித்து 10 இலட்சம் இந்திய ரூபாய்க்கான காசோலையை கில்மிஷாவுக்கு வழங்கினார். ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே இறுதிச்சுற்றில் இலங்கையை சேர்ந்த கில்மிஷா வெற்றிப்பெற்றார்.அத்தோடு கண்டியை சேர்ந்த அசானியும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.அசானி அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தமை மலைய மக்களுக்கே கிடைத்த பெருமையாகும்.போட்டியில் பங்கு பற்றிய அசானி, இலங்கை தமிழர்களை தாண்டி தமிழக மக்கள் மனதிலும் இடம்பிடித்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.அது மட்டுமல்லாது   சரிகமப நிகழ்வில் பங்கு பற்றியதன் ஊடாக  மலையக மக்கள் படும் இனனல்களை  உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார் அசானி.    அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறந்த போட்டியாளராவார்.இந்நிலையில் சரிகமப இறுதிப் போட்டி நேற்று நிறைவுபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற அசானி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தின் ஊடாக, இன்று காலை நாடு திரும்பினார்.

Advertisement

Advertisement

Advertisement