• Nov 22 2024

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரைச் சந்தித்த அசேல சம்பத்..!

Sharmi / Oct 8th 2024, 5:02 pm
image

நாட்டில் தரம் குறைந்த பொலித்தீன் பாவனையினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில்  தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் மற்றும் அஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்றையதினம்(08) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரைச் சந்தித்து தெளிவுபடுத்தினர். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அசேல சம்பத்,

கடந்த 2015 முதல் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொலித்தீன் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. 

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பொலித்தீன்  பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் என்று கூறப்பட்டது. இது உண்மையிலேயே நல்ல விஷயம் ஆகும். 

2015ல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொலித்தீனை எப்படி அடையாளம் காண்பது என்று எனக்கு நானே பரீட்சித்துப் பார்த்துக் கொண்டேன்.

அப்போது நான் பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவராக இருந்தேன். என் வீட்டில் உள்ள தோட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொலித்தீன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் பொலித்தீன் ஆகியவற்றைப் புதைத்து பரீட்சித்துப் பார்த்தேன்.  

அங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொலித்தீன் மக்கி சிதைந்த நிலையிலும்  மற்றைய பொலித்தீன் மக்காமலும் சிதைவடையாமலும் காணப்பட்டது. 

தற்பொழுது, மீண்டும் தரம் குறைந்த பொலித்தீன் விற்பனையை தலைமறைவான தொழிலதிபர்கள் துவக்கியுள்ளனர். அதுவும் 25 காசில் இருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டது. விலை அதிகரித்துள்ளது தான், ஆனால் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்த பாலித்தீன் தயாரித்து விற்பனைக்கு பயன்படுத்தப்படுவதில்லை எனவும் தெரிவித்தார். 


மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரைச் சந்தித்த அசேல சம்பத். நாட்டில் தரம் குறைந்த பொலித்தீன் பாவனையினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில்  தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் மற்றும் அஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்றையதினம்(08) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரைச் சந்தித்து தெளிவுபடுத்தினர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அசேல சம்பத்,கடந்த 2015 முதல் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொலித்தீன் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பொலித்தீன்  பயன்பாட்டிலிருந்து அகற்றப்படும் என்று கூறப்பட்டது. இது உண்மையிலேயே நல்ல விஷயம் ஆகும். 2015ல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொலித்தீனை எப்படி அடையாளம் காண்பது என்று எனக்கு நானே பரீட்சித்துப் பார்த்துக் கொண்டேன்.அப்போது நான் பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவராக இருந்தேன். என் வீட்டில் உள்ள தோட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொலித்தீன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் பொலித்தீன் ஆகியவற்றைப் புதைத்து பரீட்சித்துப் பார்த்தேன்.  அங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொலித்தீன் மக்கி சிதைந்த நிலையிலும்  மற்றைய பொலித்தீன் மக்காமலும் சிதைவடையாமலும் காணப்பட்டது. தற்பொழுது, மீண்டும் தரம் குறைந்த பொலித்தீன் விற்பனையை தலைமறைவான தொழிலதிபர்கள் துவக்கியுள்ளனர். அதுவும் 25 காசில் இருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டது. விலை அதிகரித்துள்ளது தான், ஆனால் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்த பாலித்தீன் தயாரித்து விற்பனைக்கு பயன்படுத்தப்படுவதில்லை எனவும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement