• Feb 05 2025

விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்து இளைஞன் மீது தாக்குதல்! வவுனியாவில் அட்டகாசம் செய்த குழு

Chithra / Feb 4th 2025, 7:17 am
image

 

வவுனியா, தவசிகுளம் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையால் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று தெரிவித்தனர்.

வவுனியா, தவசிகுளம் பகுதியில் இரண்டு அணிக்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

இதன் போது குறித்த மைத்தானத்திற்குள் வந்த சிலர் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், 

விளையாட்டு நிகழ்வுக்கு வழங்கப்படவிருந்த வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் கதிரைகளையும் உடைத்துள்ளனர்.

காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 

அங்கு பெறப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர். 


விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்து இளைஞன் மீது தாக்குதல் வவுனியாவில் அட்டகாசம் செய்த குழு  வவுனியா, தவசிகுளம் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையால் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று தெரிவித்தனர்.வவுனியா, தவசிகுளம் பகுதியில் இரண்டு அணிக்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன் போது குறித்த மைத்தானத்திற்குள் வந்த சிலர் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், விளையாட்டு நிகழ்வுக்கு வழங்கப்படவிருந்த வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் கதிரைகளையும் உடைத்துள்ளனர்.காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பெறப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement