வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகின்றது.
குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது.
இதற்கமைய பல இடங்களில் இயல்பு நிலையை விட 5-8 பாகை செல்சியஸ் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் 18ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் சுமார் 114 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர்களில் பெரும்பாலோர் திறந்த வெளியில் வேலை செய்யும் ஏழைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்த கோடைக்காலத்தில் இந்தியாவில் 40,000 க்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் வழக்கமான வெப்ப அலையை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமான வெப்பம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவை தாக்கும் கடும் வெப்ப அலை - சுமார் 114 பேர் பலி வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகின்றது.குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது.இதற்கமைய பல இடங்களில் இயல்பு நிலையை விட 5-8 பாகை செல்சியஸ் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது.இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் 18ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் சுமார் 114 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அவர்களில் பெரும்பாலோர் திறந்த வெளியில் வேலை செய்யும் ஏழைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை இந்த கோடைக்காலத்தில் இந்தியாவில் 40,000 க்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டனர்.இதற்கிடையில் வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் வழக்கமான வெப்ப அலையை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமான வெப்பம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.