• Nov 25 2024

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை!

Tamil nila / Nov 25th 2024, 8:07 pm
image

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை கண்சத்திர சிகிச்சை நிபுணர் Dr. மலரவன், வவுனியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். 

இதன் போது, வடக்கு மாகாண சபை இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குவிய மையத்தை உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இவற்றைச் சாதகமாக ஆராய்வதாக ஆளுநர் உறுதியளித்தார்.

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை கண்சத்திர சிகிச்சை நிபுணர் Dr. மலரவன், வவுனியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் போது, வடக்கு மாகாண சபை இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.மேலும், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குவிய மையத்தை உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இவற்றைச் சாதகமாக ஆராய்வதாக ஆளுநர் உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement