• Nov 25 2024

குவைத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகள்!

Tamil nila / Nov 25th 2024, 8:26 pm
image

2007 ஆம் ஆண்டு குவைத்துக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் 104 இலங்கைக் கைதிகளில் 32 பேர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

குவைத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் கைதிகள் ஏற்றிச் செல்லப்பட்ட உடன்படிக்கை வரலாற்றில் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது.

இந்த இலங்கையர்கள் குவைத் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, ஆபத்தான போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், வர்த்தகம் செய்தல், கடத்தல் மற்றும் கொண்டு சென்றமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்டனர்.

குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் அவர்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக மார்ச் மாதம் முதல் பணியாற்றி வந்தார்.

இலங்கைக் கைதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ள போதிலும், அதே ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் தண்டனை அனுபவித்து வரும் குவைத் கைதிகள் எவரும் நாட்டில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் 2007 ஆம் ஆண்டு குவைத்துக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் 104 இலங்கைக் கைதிகளில் 32 பேர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.குவைத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் கைதிகள் ஏற்றிச் செல்லப்பட்ட உடன்படிக்கை வரலாற்றில் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது.இந்த இலங்கையர்கள் குவைத் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, ஆபத்தான போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், வர்த்தகம் செய்தல், கடத்தல் மற்றும் கொண்டு சென்றமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்டனர்.குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் அவர்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக மார்ச் மாதம் முதல் பணியாற்றி வந்தார்.இலங்கைக் கைதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ள போதிலும், அதே ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் தண்டனை அனுபவித்து வரும் குவைத் கைதிகள் எவரும் நாட்டில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement