மத்திய வங்கக்கடலை சுற்றி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள வானிலை நிபுணர் சமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கக்கடலை சுற்றி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
அது இன்று காலை சூறாவளியாக உருவாகிறது.
நாளைக்குள், இது புயலாக மாறி, இந்தியாவின் ஒடிசா கடற்கரையிலிருந்து இந்திய துணைக் கண்டத்தை நோக்கி நகரும்.
இந்நிலையில், வங்காள விரிகுடாவைச் சுற்றி மீன்பிடித்தல் மிகவும் ஆபத்தானது எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்.
மேற்கு சப்ரகமுவ தென் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்றும் வீசக்கூடும்
தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளிலும் அவ்வப்போது மழை பெய்யும்
காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்பில் காற்றின் வேகமானது அவ்வப்போது அதிகரித்து 45 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
மத்திய வங்கக்கடலை சுற்றி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை. மத்திய வங்கக்கடலை சுற்றி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள வானிலை நிபுணர் சமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மத்திய வங்கக்கடலை சுற்றி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.அது இன்று காலை சூறாவளியாக உருவாகிறது.நாளைக்குள், இது புயலாக மாறி, இந்தியாவின் ஒடிசா கடற்கரையிலிருந்து இந்திய துணைக் கண்டத்தை நோக்கி நகரும்.இந்நிலையில், வங்காள விரிகுடாவைச் சுற்றி மீன்பிடித்தல் மிகவும் ஆபத்தானது எனவும் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும். மேற்கு சப்ரகமுவ தென் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்றும் வீசக்கூடும் தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளிலும் அவ்வப்போது மழை பெய்யும்காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்பில் காற்றின் வேகமானது அவ்வப்போது அதிகரித்து 45 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்தார்.