அதுருகிரிய படுகொலைச் சம்பவத்தின் போது துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய கார் கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (08) காலை 10 மணி அளவில் அதுருகிரிய நகரில் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகுகலை நிலைய திறப்பு விழாவின் போது குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற ‘கிளப் வசந்த’ மற்றும் 38 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் கொழும்பு 7 மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் பிரபல பாடகியான கே. சுஜீவாவும் இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதுருகிரிய படுகொலைச் சம்பவம்: துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பு அதுருகிரிய படுகொலைச் சம்பவத்தின் போது துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய கார் கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இன்று (08) காலை 10 மணி அளவில் அதுருகிரிய நகரில் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகுகலை நிலைய திறப்பு விழாவின் போது குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற ‘கிளப் வசந்த’ மற்றும் 38 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் கொழும்பு 7 மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் பிரபல பாடகியான கே. சுஜீவாவும் இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இந்நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.