• Jan 27 2025

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது தாக்குதல்

Tharmini / Jan 25th 2025, 2:20 pm
image

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது இனந்தெரியாதநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செட்டிக்குளம் பிரதேசத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வீதியில் தரித்து நின்ற சமயத்தில் குறித்த  தனியார்  பேரூந்தினை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து முந்திச்செல்ல முற்பட்டுள்ளது.

இதன் போது திடீரேன தனியார் பேரூந்து புறப்பட முற்பட்டமையினால் ஆடைத்தொழிச்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தின் கண்ணாடியுடன் தனியார் பேரூந்தின் கண்ணாடியுடன் மோதுண்டு சிறு சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து இரு பேரூந்தின் சாரதிகளுக்கும் கருத்து முரன்பாடு ஏற்பட்டமையுடன் பின்னர் இரு பேரூந்துகளும் தொடர்ந்து பயணித்தன.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தினை சூடுவெந்தபுலவு பகுதியில் வழிமறித்த இனந்தெரியாத நபர்கள் பேரூந்தின் முன்பக்க கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து ஆடைத்தொழிற்சாலையில் சாரதி தனது ஊழியர்களை பாதுகாக்கும் பொருட்டு பேரூந்தினை உடனடியாக எடுத்துக்கொண்டு வந்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். 

எனினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி உலுக்குளம் பொலிஸ் பிரிவில் வருகின்றமையினால் அப்பகுதி பொலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.



வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது தாக்குதல் வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது இனந்தெரியாதநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செட்டிக்குளம் பிரதேசத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வீதியில் தரித்து நின்ற சமயத்தில் குறித்த  தனியார்  பேரூந்தினை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து முந்திச்செல்ல முற்பட்டுள்ளது.இதன் போது திடீரேன தனியார் பேரூந்து புறப்பட முற்பட்டமையினால் ஆடைத்தொழிச்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தின் கண்ணாடியுடன் தனியார் பேரூந்தின் கண்ணாடியுடன் மோதுண்டு சிறு சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து இரு பேரூந்தின் சாரதிகளுக்கும் கருத்து முரன்பாடு ஏற்பட்டமையுடன் பின்னர் இரு பேரூந்துகளும் தொடர்ந்து பயணித்தன.ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்தினை சூடுவெந்தபுலவு பகுதியில் வழிமறித்த இனந்தெரியாத நபர்கள் பேரூந்தின் முன்பக்க கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இதனையடுத்து ஆடைத்தொழிற்சாலையில் சாரதி தனது ஊழியர்களை பாதுகாக்கும் பொருட்டு பேரூந்தினை உடனடியாக எடுத்துக்கொண்டு வந்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். எனினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி உலுக்குளம் பொலிஸ் பிரிவில் வருகின்றமையினால் அப்பகுதி பொலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement