• Jan 27 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் பரிந்துரைகளை செயல்படுத்த மூன்று பேர் கொண்ட குழு

Tharmini / Jan 25th 2025, 1:29 pm
image

இம்தியாஸ் பாக்கீர் மாக்கரால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 12 பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை செயல்படுத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்ததாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

வாரஇறுதி சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்சியின் யாப்பின் பொதுவான கட்டமைப்பின்படி பணிகளை வழிநடத்தவும், தகுதியான திட்டங்கள் மற்றும் இம்தியாஸின் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிக்கவும் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாகர் ஆகிய மூவரால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இம்தியாஸ் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட குறித்த குழு ஒருமுறை ஒன்று கூடியதாகவும், எதிர்வரும் வாரத்திற்குள் மீண்டும் ஒரு கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

கட்சியின் தவிசாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மகர், கட்சியை மறுசீரமைக்கக் கோரி கடந்த ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பரிந்துரைகளை செயல்படுத்த மூன்று பேர் கொண்ட குழு இம்தியாஸ் பாக்கீர் மாக்கரால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 12 பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை செயல்படுத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்ததாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.வாரஇறுதி சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.கட்சியின் யாப்பின் பொதுவான கட்டமைப்பின்படி பணிகளை வழிநடத்தவும், தகுதியான திட்டங்கள் மற்றும் இம்தியாஸின் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிக்கவும் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாகர் ஆகிய மூவரால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.இம்தியாஸ் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட குறித்த குழு ஒருமுறை ஒன்று கூடியதாகவும், எதிர்வரும் வாரத்திற்குள் மீண்டும் ஒரு கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.கட்சியின் தவிசாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மகர், கட்சியை மறுசீரமைக்கக் கோரி கடந்த ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement