• Jan 27 2025

இலங்கை மீனவர்களுக்கு பயிற்சித் திட்டம் !

Tharmini / Jan 25th 2025, 1:23 pm
image

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்,  ஜனவரி 22 ஆம் திகதி அமைச்சகத்தில் மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாத்தை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.

மீன்வளத்தில் கூட்டு முயற்சிகளை ஊக்குவிப்பது மற்றும் மாலைத்தீவில் பரவலாகப் பின்பற்றப்படும் ஒரு நிலையான மீன்பிடி நுட்பமான pole and line மீன்பிடி முறைகள் குறித்து இலங்கை மீனவர்களுக்கு பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் இலங்கை மீனவர்களுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், மாலைத்தீவில் மீனவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் உதவும் என்று உயர் ஸ்தானிகர் மசூத் இமாட் எடுத்துரைத்தார். தற்போது மாலைத்தீவில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் 17,000 இலங்கையர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அவர் பாராட்டினார், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளைப் பிரதிபலிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாலைத்தீவு கடற்பரப்பின் வழியாக பயணித்த மீன்பிடியில் ஈடுபடாத இரண்டு இலங்கை மீனவ படகுகள் சமீபத்தில் தடுத்து வைக்கப்பட்டமை குறித்து அமைச்சர் சந்திரசேகர் உயர் ஸ்தானிகரின் அவதானத்திற்கு கெண்டுவந்தார். இதுபோன்ற சம்பவங்களை புரிந்துணர்வுடன் மறுபரிசீலனை செய்யுமாறும் மாலைத்தீவு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார், மீன்பிடித்தல் அல்லது பிற அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்து மேற்கொள்ளும் எந்தவெரு நடவடிக்கைகளிலும் ஆட்சேபனையில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் கலாநிதி பி.கே. கோலிதா கமல் ஜினதாசவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். வலுவான இருதரப்பு உறவுகளை வளர்க்கும் அதே வேளையில், மீன்பிடித் துறையின் நிலையான வளர்ச்சிக்கு இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் இணைந்து பணியாற்றுவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டை இந்தக் கலந்துரையாடல் மீண்டும் உறுதிப்படுத்தியது

இலங்கை மீனவர்களுக்கு பயிற்சித் திட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்,  ஜனவரி 22 ஆம் திகதி அமைச்சகத்தில் மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாத்தை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.மீன்வளத்தில் கூட்டு முயற்சிகளை ஊக்குவிப்பது மற்றும் மாலைத்தீவில் பரவலாகப் பின்பற்றப்படும் ஒரு நிலையான மீன்பிடி நுட்பமான pole and line மீன்பிடி முறைகள் குறித்து இலங்கை மீனவர்களுக்கு பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.இந்தத் திட்டம் இலங்கை மீனவர்களுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், மாலைத்தீவில் மீனவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் உதவும் என்று உயர் ஸ்தானிகர் மசூத் இமாட் எடுத்துரைத்தார். தற்போது மாலைத்தீவில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் 17,000 இலங்கையர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அவர் பாராட்டினார், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளைப் பிரதிபலிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.மாலைத்தீவு கடற்பரப்பின் வழியாக பயணித்த மீன்பிடியில் ஈடுபடாத இரண்டு இலங்கை மீனவ படகுகள் சமீபத்தில் தடுத்து வைக்கப்பட்டமை குறித்து அமைச்சர் சந்திரசேகர் உயர் ஸ்தானிகரின் அவதானத்திற்கு கெண்டுவந்தார். இதுபோன்ற சம்பவங்களை புரிந்துணர்வுடன் மறுபரிசீலனை செய்யுமாறும் மாலைத்தீவு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார், மீன்பிடித்தல் அல்லது பிற அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்து மேற்கொள்ளும் எந்தவெரு நடவடிக்கைகளிலும் ஆட்சேபனையில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் கலாநிதி பி.கே. கோலிதா கமல் ஜினதாசவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். வலுவான இருதரப்பு உறவுகளை வளர்க்கும் அதே வேளையில், மீன்பிடித் துறையின் நிலையான வளர்ச்சிக்கு இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் இணைந்து பணியாற்றுவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டை இந்தக் கலந்துரையாடல் மீண்டும் உறுதிப்படுத்தியது

Advertisement

Advertisement

Advertisement