• Nov 22 2024

மக்களே அவதானம்...! இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு...! மாயமான படகுகள்...!samugammedia

Sharmi / Dec 15th 2023, 9:10 am
image

வடக்கின் பெரிய நீர்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நன்னீர் மீன்பிடி படகுகள் சில மாயமாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக நீர் வருகை காரணமாக இன்று அதிகாலை வான் கதவுகள் படிப்படியாக திறக்கப்படும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்திருந்தது.

அந்த வகையில் இன்று 12 வான் கதவுகள் திறந்து விடப்பட்டது.

இதேவேளை இரணைமடு குளத்தில் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள் சில மாயமாகியுள்ளதுடன், வலைகளும் அடித்து செல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீர் வருகையை அடிப்படையாகக் கொண்டு வான்கதவுகள் மற்றும் திறக்கப்படும் அளவு தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

படிப்படியாக வான்கதவுகள் திறக்கப்படும் எனவும், அறிவுறுத்தலிற்கு அமைவாக மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும், குளங்கள் வான்பாய்வதாலும் மக்கள் இடர்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில், கிராம சேவையாளர் உள்ளிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொலிசார், இராணுவத்தினரின் உதவிகளை நாடுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.




மக்களே அவதானம். இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு. மாயமான படகுகள்.samugammedia வடக்கின் பெரிய நீர்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை நன்னீர் மீன்பிடி படகுகள் சில மாயமாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.அதிக நீர் வருகை காரணமாக இன்று அதிகாலை வான் கதவுகள் படிப்படியாக திறக்கப்படும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்திருந்தது.அந்த வகையில் இன்று 12 வான் கதவுகள் திறந்து விடப்பட்டது. இதேவேளை இரணைமடு குளத்தில் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள் சில மாயமாகியுள்ளதுடன், வலைகளும் அடித்து செல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.நீர் வருகையை அடிப்படையாகக் கொண்டு வான்கதவுகள் மற்றும் திறக்கப்படும் அளவு தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.படிப்படியாக வான்கதவுகள் திறக்கப்படும் எனவும், அறிவுறுத்தலிற்கு அமைவாக மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும், குளங்கள் வான்பாய்வதாலும் மக்கள் இடர்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில், கிராம சேவையாளர் உள்ளிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொலிசார், இராணுவத்தினரின் உதவிகளை நாடுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement