• Apr 02 2025

ராகமையில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உட்பட மூவர் காயம்..! பொலிஸார் தீவிர விசாரணை

Chithra / Dec 15th 2023, 9:17 am
image

 

ராகமை - வல்பொல பிரதேசத்தில் நேற்று  இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வழங்கியுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்கு வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 17 வயதுடைய மாணவன் மற்றும் பெண் உள்ளிட்ட மூவர் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ராகமையில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உட்பட மூவர் காயம். பொலிஸார் தீவிர விசாரணை  ராகமை - வல்பொல பிரதேசத்தில் நேற்று  இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வழங்கியுள்ளது.குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்கு வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 17 வயதுடைய மாணவன் மற்றும் பெண் உள்ளிட்ட மூவர் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement