• May 17 2024

மக்களே அவதானம்...! 27ம் திகதி முதல் வடக்கு கிழக்கில் கனமழை...!samugammedia

Sharmi / Nov 25th 2023, 7:28 am
image

Advertisement

எதிர்வரும்  27ம் திகதி அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் 29.11.2023 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதாக விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 27ம் திகதி முதல் 03.12.2023 வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தற்போதைய மாதிரிகளின் கணிப்பின் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களூடாகவே நகரும் வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் இது உருவாகும் காலப்பகுதியில் நிலவும் வளிமண்டல வெப்பநிலை, சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை, காற்றழுத்த தாழ்வு நிலையின் அமுக்க சாய்வுத் தன்மை மற்றும் தாழ்வு நிலைக்கு கிடைக்கும் மறைவெப்ப சக்தி என்பவற்றை பொறுத்து நகரும் திசை மாற்றமடையலாம்.

மேற்குறிப்பிட்ட காரணிகள் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் இருந்து புயலாக வலுப்பெறுமா என்பதனையும் தீர்மானிக்கும் எனவும் தெரிவித்தார்.



மக்களே அவதானம். 27ம் திகதி முதல் வடக்கு கிழக்கில் கனமழை.samugammedia எதிர்வரும்  27ம் திகதி அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் 29.11.2023 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதாக விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் 27ம் திகதி முதல் 03.12.2023 வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.தற்போதைய மாதிரிகளின் கணிப்பின் படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களூடாகவே நகரும் வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் இது உருவாகும் காலப்பகுதியில் நிலவும் வளிமண்டல வெப்பநிலை, சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை, காற்றழுத்த தாழ்வு நிலையின் அமுக்க சாய்வுத் தன்மை மற்றும் தாழ்வு நிலைக்கு கிடைக்கும் மறைவெப்ப சக்தி என்பவற்றை பொறுத்து நகரும் திசை மாற்றமடையலாம்.மேற்குறிப்பிட்ட காரணிகள் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் இருந்து புயலாக வலுப்பெறுமா என்பதனையும் தீர்மானிக்கும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement