2024 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் சாதனை படைத்த கைப்பணியாளர்களுக்கான மாபெரும் விருது வழங்கும் நிகழ்வு இன்று (17) திருகோணமலை உப்புவெளி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது கிழக்கு மாகாண கிராமியத் தொழிற்துறைத் திணைக்களப் பணிப்பாளர் நா. மணிவண்ணன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
தேசிய மற்றும் மாகாண மட்ட சில்ப அபிமானி தேசிய அருங்கலைகள் மற்றும் தேசிய கைத்தறிப் புடவைத் தயாரிப்புப் போட்டி மற்றும் நெசவு வாரம் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி, வெற்றி பெற்ற சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற 12 உற்பத்தியாளர்களும் மாகாண மட்டத்தில் சாதனை படைத்த 170 உற்பத்தியாளர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் பைசல் ஆப்தீன் கலந்து கொண்டதோடு, சிறப்பு அதிதிகளாக மாகாண சபை செயலக செயலாளர்,மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண திணைக்களத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வினை மேலும் சிறப்பிக்கும் முகமாக கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
சாதனை படைத்த கிழக்கு மாகாண கைப்பணியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 2024 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் சாதனை படைத்த கைப்பணியாளர்களுக்கான மாபெரும் விருது வழங்கும் நிகழ்வு இன்று (17) திருகோணமலை உப்புவெளி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வானது கிழக்கு மாகாண கிராமியத் தொழிற்துறைத் திணைக்களப் பணிப்பாளர் நா. மணிவண்ணன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.தேசிய மற்றும் மாகாண மட்ட சில்ப அபிமானி தேசிய அருங்கலைகள் மற்றும் தேசிய கைத்தறிப் புடவைத் தயாரிப்புப் போட்டி மற்றும் நெசவு வாரம் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி, வெற்றி பெற்ற சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற 12 உற்பத்தியாளர்களும் மாகாண மட்டத்தில் சாதனை படைத்த 170 உற்பத்தியாளர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் பைசல் ஆப்தீன் கலந்து கொண்டதோடு, சிறப்பு அதிதிகளாக மாகாண சபை செயலக செயலாளர்,மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண திணைக்களத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனர்.இந்நிகழ்வினை மேலும் சிறப்பிக்கும் முகமாக கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.