• Feb 08 2025

மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வு!

Thansita / Feb 7th 2025, 9:48 am
image

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும்  நிகழ்ச்சித் திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வானது  மாவட்ட சமூக தேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் திரு ந. ரதிக்குமார்  தலைமையில்  நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில்  நடைபெற்றது. 

இந் நிகழ்வில்  பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமதுரையில், மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் எனவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 10,500 வரையிலான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் எனவும், அவர்களுக்குரிய ஏதேனும் திறனை அடையாளம் கண்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்த வேண்டும் எனவும், குறிப்பிட்டார்.

மேலும்  JICA நிறுவனத்துடன் இணைந்து சமூக சேவைகள் திணைக்களம், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம்  மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

JICA (Employment Support for Persons with Disabilities) நிகழ்ச்சித் திட்டத்தின் கீ‌ழ் எமது மாவட்டம் குறிக்கப்பட்ட இலக்கினை விட கூடுதலான இலக்கை  அடைந்து  அதிகளவான மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவான வேலைவாய்புக்களைப் பெற்றுக்கொடுத்தவர்கள் என்ற வகையில் எமது மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது எனக் குறிப்பிட்டு, அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர்கள்,  சமூகசேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனிதவலு வேலை வாய்ப்பு  உத்தியோகத்தர்கள், தொழில் வாய்ப்பினை வழங்கிய நிறுவனங்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார்.  

இந் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றி இலக்கினை அடைய செயற்பட்ட சமூகசேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனிதவலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள், தொழில் வாய்ப்பினை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் கெளரவிக்கப்பட்டார்கள்.

2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டம் 14 நபர்களை தொழில் ஈடுபடுத்தி தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஜப்பான் JICA நிறுவனத்தின் திட்டத்திற்கான பிரதான ஆலோசகர் திரு. Shimizy Takachi, நிபுணர் Ms. Miho Ito, பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர்கள் மாவட்ட பிரதேச மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வு மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பு ஆதரவினை வழங்கும்  நிகழ்ச்சித் திட்டத்தின் விருது வழங்கும் நிகழ்வானது  மாவட்ட சமூக தேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் திரு ந. ரதிக்குமார்  தலைமையில்  நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில்  நடைபெற்றது. இந் நிகழ்வில்  பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமதுரையில், மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் எனவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 10,500 வரையிலான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் எனவும், அவர்களுக்குரிய ஏதேனும் திறனை அடையாளம் கண்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்த வேண்டும் எனவும், குறிப்பிட்டார்.மேலும்  JICA நிறுவனத்துடன் இணைந்து சமூக சேவைகள் திணைக்களம், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம்  மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். JICA (Employment Support for Persons with Disabilities) நிகழ்ச்சித் திட்டத்தின் கீ‌ழ் எமது மாவட்டம் குறிக்கப்பட்ட இலக்கினை விட கூடுதலான இலக்கை  அடைந்து  அதிகளவான மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவான வேலைவாய்புக்களைப் பெற்றுக்கொடுத்தவர்கள் என்ற வகையில் எமது மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது எனக் குறிப்பிட்டு, அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர்கள்,  சமூகசேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனிதவலு வேலை வாய்ப்பு  உத்தியோகத்தர்கள், தொழில் வாய்ப்பினை வழங்கிய நிறுவனங்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார்.  இந் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றி இலக்கினை அடைய செயற்பட்ட சமூகசேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனிதவலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள், தொழில் வாய்ப்பினை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் கெளரவிக்கப்பட்டார்கள்.2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டம் 14 நபர்களை தொழில் ஈடுபடுத்தி தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் ஜப்பான் JICA நிறுவனத்தின் திட்டத்திற்கான பிரதான ஆலோசகர் திரு. Shimizy Takachi, நிபுணர் Ms. Miho Ito, பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர்கள் மாவட்ட பிரதேச மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement