• Jul 16 2025

பொன்சேகா மீதான கொலை முயற்சி - நீதிமன்றத்தின் உத்தரவு

Chithra / Jul 16th 2025, 12:42 pm
image

 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்று சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்த சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்கில் சாட்சியங்களை ஆய்வு செய்வதற்கு மற்றொரு திகதியை வழங்குமாறு வழக்குத் தொடுப்பவர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க நீதிமன்றத்தை கோரினார்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட வழக்கில் சாட்சியங்களை மேலும் விசாரிப்பதை ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

ஏப்ரல் 25, 2006 அன்று கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய சதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

பொன்சேகா மீதான கொலை முயற்சி - நீதிமன்றத்தின் உத்தரவு  முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இன்று சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்த சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்கில் சாட்சியங்களை ஆய்வு செய்வதற்கு மற்றொரு திகதியை வழங்குமாறு வழக்குத் தொடுப்பவர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க நீதிமன்றத்தை கோரினார்.கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட வழக்கில் சாட்சியங்களை மேலும் விசாரிப்பதை ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.ஏப்ரல் 25, 2006 அன்று கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய சதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement