• Jan 10 2025

Tharmini / Jan 8th 2025, 5:31 pm
image

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து 25 ஆவது தடவையாக நடத்திய சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வீரகேசரி வெளியீட்டு நிறுவனமான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் 13 விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது.

25ஆவது தடவையாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா நேற்று (07) கல்கிஸை மவுன்ட்லவெனியா ஹோட்டலில் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு தகவல்களையும் செய்திகளையும் கொண்டு சேர்க்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களின் சேவையையும் பணியையும் அங்கீகரிப்பதே இந்த விருது வழங்கலின் மிக முக்கிய நோக்கமாகும்.  

1998ஆம் ஆண்டுகாலப் பகுதியில் இலங்கையில் ஊடக சுதந்திரம் முற்றுமுழுதாக கட்டுப்படுத்தப்பட்டு, ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அதற்கு எதிராக இலங்கையின் ஊடகத்துறை போராடிக்கொண்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை பத்திரிகைகள் வெளியீட்டாளர் சங்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் என்பன இணைந்து செயற்பட ஆரம்பித்தன.

அதனடிப்படையில் 1998ஆம் ஆண்டில் இந்த அமைப்புக்கள் இணைந்து ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தன. கொழும்பில் நடந்த அந்த மாநாட்டில் இலங்கையின் ஊடகத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் முன்வைக்கப்பட்ட பரந்துபட்ட திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஊடக சுதந்திரம் மற்றும் சமூகப் பொறுப்பு தொடர்பான கொழும்பு பிரகடனம் என்ற பெயரில் ஒரு பிரகடனமாக இந்த திட்டம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையிலேயே சிறந்த ஊடகவியலாளர்களுக்கு அவர்களின் சேவையை அங்கீகரித்து விருது வழங்கும் விழா 25 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படியே இம்முறை சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

இதன்போது, வருடத்துக்கான சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான விருதினை வீரசேகரி இணையத்தளம் தனதாக்கிக்கொண்டது.

இவ்விருதை வீரகேசரி இணையத்தளத்தில் பொறுப்பாசிரியர் வீ. பிரியதர்ஷன் உள்ளிட்ட குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

அத்தோடு, சிறந்த காணொளி கதை கூறலுக்கான விருது வீரகேசரி டிஜிட்டல் பிரிவு தட்டிச் சென்றது. இந்த விருதை வீரகேசரி டிஜிட்டல் பிரிவினர் பெற்றுக்கொண்டனர்.

இதேநேரம் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த காணொளி கதை கூறலுக்கான திறமைச் சான்றிதழுக்கான இரு விருதுகளை வீரகேசரி டிஜிட்டல் பிரிவின் செய்தி ஆசிரியர்களான எம்.டி. லூசியஸ் மற்றும் செல்வா கேகேஸ்வரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

ஆண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான திறமைச் சான்றிதழ் விருதை வீரகேசரி பத்திரிகையின் துணை ஆசிரியர் ரொபட் அன்டனி பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான திறமைச் சான்றிதழ் விருதை வீரகேசரி வாராந்த பத்திரிகையின் சிரேஷ்ட பக்கவடிவமைப்பாளர் பி. லோகநாதன் பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த சுற்றுச்சூழல் அறிக்கையிடலுக்கான விருதை வீரகேசரி செய்தி ஆசிரியர் ஆர். ராம்குமார் பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த விவரணக் கட்டுரைக்கான உபாலி விஜயவர்தன விருது தமிழ் மொழிப் பிரிவில் வீரகேசரியின் ஊடகவியலாளர் ஹஷ்தனி ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டதுடன் திறமைச் சான்றிதழ் வீரகேசரி செய்தி ஆசிரியர் ஆர். ராம்குமாருக்கு கிடைத்தது.

ஆண்டின் சிறந்த சமூக பிரச்சினை தொடர்பான அறிக்கையிடலுக்கான சுப்ரமணியம் செட்டியார் திறமைச் சான்றிதழ் விருதையும் வீரகேசரி வார வெளியீட்டின் செய்தி ஆசிரியர் ஆர். ராம்குமார் பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பி. ஏ. சிறிவர்தன விருதை தமிழ் மொழிப் பிரிவில் வீரகேசரி வார இதழின் உதவி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன் பெற்றுக்கொண்டார்.

தகவல் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்திய செய்தி அறிக்கையிடலுக்கான திறமைச் சான்றிதழ் விருதையும் வீரகேசரி வாரவெளியீட்டின் உதவி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன் பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த வர்த்தக செய்தியிடலுக்கான விருதை தமிழ் மொழிப் பிரிவில் பட்டயக் கணக்காளர் வரி முகாமைத்துவ ஆலோசகர் சுவாமிநாதன் சர்மா பெற்றுக்கொண்டார்.

இதேநேரம் ஆண்டின் சிறந்த விவரணக் கட்டுரைக்கான உபாலி விஜயவர்தன சிறப்பு சான்றிதழ் விருது தமிழ் மொழிப் பிரிவில் விடிவெள்ளி பத்திரிகையின் முஹமட் சபீர் பெற்றுக்கொண்டார்.

தகவல் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்திய செய்தி அறிக்கையிடலுக்கான விருதை தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் கருப்பையா பிரச்சன்னகுமார் பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த சுகாதார மற்றும் மருத்துவ அறிக்கையிடலுக்கான சிறப்பு சான்றிதழ் விருதை தமிழ்மொழிப் பிரிவில் தினக்குரலின் ஊடகவியலாளர் பாத்திமா ஹுஸ்னா பெற்றுக்கொண்டார்.

ஆண்டின் சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான திறமைச் சான்றிதழ் விருதை தினக்குரல் பத்திரிகையின் பக்க வடிவமைப்பாளர்களான எஸ். பாமதி மற்றும் ஆர். கங்கா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதேநேரம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான விருதை சிலோன் டுடே பத்திரிகையின் பிரதி ஆசிரியர் ராமையா சுலோச்சனா தொடர்ச்சியான 2 ஆவது வருடமாக இம்முறையும் பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.

மூத்த ஊடகவியலாளர்களான பெனிட் ராஜபக்ஷ, நிஸமுதீன் உடையார் மொஹமட் அமீன், சந்திரிகா விஜயசுந்தர, சனிற்றா கரீம், அம்மையப்பாப்பிள்ளை யோகமூர்த்தி ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து 25 ஆவது தடவையாக நடத்திய சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வீரகேசரி வெளியீட்டு நிறுவனமான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் 13 விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது.25ஆவது தடவையாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா நேற்று (07) கல்கிஸை மவுன்ட்லவெனியா ஹோட்டலில் நடைபெற்றது.பொதுமக்களுக்கு தகவல்களையும் செய்திகளையும் கொண்டு சேர்க்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களின் சேவையையும் பணியையும் அங்கீகரிப்பதே இந்த விருது வழங்கலின் மிக முக்கிய நோக்கமாகும்.  1998ஆம் ஆண்டுகாலப் பகுதியில் இலங்கையில் ஊடக சுதந்திரம் முற்றுமுழுதாக கட்டுப்படுத்தப்பட்டு, ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அதற்கு எதிராக இலங்கையின் ஊடகத்துறை போராடிக்கொண்டிருந்தது.அந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை பத்திரிகைகள் வெளியீட்டாளர் சங்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் என்பன இணைந்து செயற்பட ஆரம்பித்தன.அதனடிப்படையில் 1998ஆம் ஆண்டில் இந்த அமைப்புக்கள் இணைந்து ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தன. கொழும்பில் நடந்த அந்த மாநாட்டில் இலங்கையின் ஊடகத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் முன்வைக்கப்பட்ட பரந்துபட்ட திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஊடக சுதந்திரம் மற்றும் சமூகப் பொறுப்பு தொடர்பான கொழும்பு பிரகடனம் என்ற பெயரில் ஒரு பிரகடனமாக இந்த திட்டம் வெளியிடப்பட்டது.இந்த நிலையிலேயே சிறந்த ஊடகவியலாளர்களுக்கு அவர்களின் சேவையை அங்கீகரித்து விருது வழங்கும் விழா 25 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.அதன்படியே இம்முறை சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.இதன்போது, வருடத்துக்கான சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான விருதினை வீரசேகரி இணையத்தளம் தனதாக்கிக்கொண்டது.இவ்விருதை வீரகேசரி இணையத்தளத்தில் பொறுப்பாசிரியர் வீ. பிரியதர்ஷன் உள்ளிட்ட குழுவினர் பெற்றுக்கொண்டனர்.அத்தோடு, சிறந்த காணொளி கதை கூறலுக்கான விருது வீரகேசரி டிஜிட்டல் பிரிவு தட்டிச் சென்றது. இந்த விருதை வீரகேசரி டிஜிட்டல் பிரிவினர் பெற்றுக்கொண்டனர்.இதேநேரம் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த காணொளி கதை கூறலுக்கான திறமைச் சான்றிதழுக்கான இரு விருதுகளை வீரகேசரி டிஜிட்டல் பிரிவின் செய்தி ஆசிரியர்களான எம்.டி. லூசியஸ் மற்றும் செல்வா கேகேஸ்வரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.ஆண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான திறமைச் சான்றிதழ் விருதை வீரகேசரி பத்திரிகையின் துணை ஆசிரியர் ரொபட் அன்டனி பெற்றுக்கொண்டார்.ஆண்டின் சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான திறமைச் சான்றிதழ் விருதை வீரகேசரி வாராந்த பத்திரிகையின் சிரேஷ்ட பக்கவடிவமைப்பாளர் பி. லோகநாதன் பெற்றுக்கொண்டார்.ஆண்டின் சிறந்த சுற்றுச்சூழல் அறிக்கையிடலுக்கான விருதை வீரகேசரி செய்தி ஆசிரியர் ஆர். ராம்குமார் பெற்றுக்கொண்டார்.ஆண்டின் சிறந்த விவரணக் கட்டுரைக்கான உபாலி விஜயவர்தன விருது தமிழ் மொழிப் பிரிவில் வீரகேசரியின் ஊடகவியலாளர் ஹஷ்தனி ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டதுடன் திறமைச் சான்றிதழ் வீரகேசரி செய்தி ஆசிரியர் ஆர். ராம்குமாருக்கு கிடைத்தது.ஆண்டின் சிறந்த சமூக பிரச்சினை தொடர்பான அறிக்கையிடலுக்கான சுப்ரமணியம் செட்டியார் திறமைச் சான்றிதழ் விருதையும் வீரகேசரி வார வெளியீட்டின் செய்தி ஆசிரியர் ஆர். ராம்குமார் பெற்றுக்கொண்டார்.ஆண்டின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பி. ஏ. சிறிவர்தன விருதை தமிழ் மொழிப் பிரிவில் வீரகேசரி வார இதழின் உதவி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன் பெற்றுக்கொண்டார்.தகவல் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்திய செய்தி அறிக்கையிடலுக்கான திறமைச் சான்றிதழ் விருதையும் வீரகேசரி வாரவெளியீட்டின் உதவி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன் பெற்றுக்கொண்டார்.ஆண்டின் சிறந்த வர்த்தக செய்தியிடலுக்கான விருதை தமிழ் மொழிப் பிரிவில் பட்டயக் கணக்காளர் வரி முகாமைத்துவ ஆலோசகர் சுவாமிநாதன் சர்மா பெற்றுக்கொண்டார்.இதேநேரம் ஆண்டின் சிறந்த விவரணக் கட்டுரைக்கான உபாலி விஜயவர்தன சிறப்பு சான்றிதழ் விருது தமிழ் மொழிப் பிரிவில் விடிவெள்ளி பத்திரிகையின் முஹமட் சபீர் பெற்றுக்கொண்டார்.தகவல் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்திய செய்தி அறிக்கையிடலுக்கான விருதை தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் கருப்பையா பிரச்சன்னகுமார் பெற்றுக்கொண்டார்.ஆண்டின் சிறந்த சுகாதார மற்றும் மருத்துவ அறிக்கையிடலுக்கான சிறப்பு சான்றிதழ் விருதை தமிழ்மொழிப் பிரிவில் தினக்குரலின் ஊடகவியலாளர் பாத்திமா ஹுஸ்னா பெற்றுக்கொண்டார்.ஆண்டின் சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான திறமைச் சான்றிதழ் விருதை தினக்குரல் பத்திரிகையின் பக்க வடிவமைப்பாளர்களான எஸ். பாமதி மற்றும் ஆர். கங்கா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.இதேநேரம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான விருதை சிலோன் டுடே பத்திரிகையின் பிரதி ஆசிரியர் ராமையா சுலோச்சனா தொடர்ச்சியான 2 ஆவது வருடமாக இம்முறையும் பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.மூத்த ஊடகவியலாளர்களான பெனிட் ராஜபக்ஷ, நிஸமுதீன் உடையார் மொஹமட் அமீன், சந்திரிகா விஜயசுந்தர, சனிற்றா கரீம், அம்மையப்பாப்பிள்ளை யோகமூர்த்தி ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement