• Nov 05 2024

தண்ணீரென நினைத்து அமிலத்தை அருந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

Chithra / Nov 2nd 2024, 7:17 am
image

Advertisement

 

கண்டி - கலஹா பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, பியசேனபுர பகுதியில் தண்ணீர் என நினைத்து அமிலத்தை (ஆசீட்) அருந்தியதில் குழந்தையொன்று  உயிரிழந்துள்ளது.

2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

தனது குழந்தையுடன் தந்தையொருவர், தெல்தோட்டை நகரிலுள்ள தங்க வியாபார நிலையமொன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கு பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அமிலத்தையே குழந்தை அருந்தியுள்ளது என தெரியவருகின்றது.

இதனையடுத்து குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தண்ணீரென நினைத்து அமிலத்தை அருந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு  கண்டி - கலஹா பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, பியசேனபுர பகுதியில் தண்ணீர் என நினைத்து அமிலத்தை (ஆசீட்) அருந்தியதில் குழந்தையொன்று  உயிரிழந்துள்ளது.2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்தனது குழந்தையுடன் தந்தையொருவர், தெல்தோட்டை நகரிலுள்ள தங்க வியாபார நிலையமொன்றுக்கு சென்றுள்ளார்.அங்கு பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அமிலத்தையே குழந்தை அருந்தியுள்ளது என தெரியவருகின்றது.இதனையடுத்து குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தது.சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement