• Apr 16 2025

பிணை நிபந்தனைகள் பூர்த்தி: வீடு திரும்பினார் முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன்..!

Sharmi / Apr 9th 2025, 3:53 pm
image

இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் அவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(9) உத்தரவிட்டது.

இலஞ்சம் பெற உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

நேற்று (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார். 

இருப்பினும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் வியாழேந்திரன்  மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் அனைத்து பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததால் இன்று நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.





பிணை நிபந்தனைகள் பூர்த்தி: வீடு திரும்பினார் முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன். இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் அவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(9) உத்தரவிட்டது.இலஞ்சம் பெற உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். நேற்று (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் வியாழேந்திரன்  மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அவர் அனைத்து பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததால் இன்று நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now