• Nov 23 2024

மைத்திரிபால சிறிசேனவுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!

Chithra / Jun 12th 2024, 11:58 am
image

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு தடை விதித்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜுன் 25 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  

மைத்திரிபால சிறிசேனவுக்கு நீடிக்கும் தடை உத்தரவு.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை  அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு தடை விதித்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜுன் 25 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement